Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கன்னி ராசியினரே இந்த மாதத்தில் இதெல்லாம் வேண்டாம்.. | January Month Rasi Palan 2023 Kanni

Nandhinipriya Ganeshan Updated:
கன்னி ராசியினரே இந்த மாதத்தில் இதெல்லாம் வேண்டாம்.. | January Month Rasi Palan 2023 Kanni  Representative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் கன்னி ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

கன்னி ராசியினரே இந்த மாதத்தில் இதெல்லாம் வேண்டாம்.. | January Month Rasi Palan 2023 Kanni  Representative Image

புதன் பகவானை ராசி நாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்களே! வருடத்தின் முதல் மாதத்திலேயே உங்க ராசி அதிபதியான புதன் வக்கிர நிலையில் இருப்பதால், பல அற்புதமான பலன்களை பெறப்போகிறீர்கள். எந்த செயலை செய்யும்போதும் உங்களுக்கு எதிராக இருப்பவர்கள் கூட உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு வந்துவிடுவார். அதாவது, எதிரியும் நண்பராக மாறும் காலம். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நிறைய நடைபெற வாய்ப்புள்ளது. எந்தவொரு காரியத்தையும் தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் ஈடுபடுவீர்கள். 

8ஆம் தேதிக்கு பிறகு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். விலகிப்போன நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். 13ஆம் தேதிக்கு பிறகு செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைவதால், சொந்தபந்தங்களுக்கு இடையில் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்ள வேண்டாம். அதேபோல், எந்த சுபகாரியங்களுக்கு சென்றாலும் போனமா வந்தமா என்று இருப்பது நல்லது. 

கன்னி ராசியினரே இந்த மாதத்தில் இதெல்லாம் வேண்டாம்.. | January Month Rasi Palan 2023 Kanni  Representative Image

ராசிக்கு 5வது வீட்டில் இருந்த சனிபகவான் 6வது வீட்டிற்கு பெயர்ச்சியாவதால், தொழிலில் போட்டிகள் குறையும். கடன் பிரச்சனை தீரும். ஜனவரி 17க்கு பிறகு ஒரு நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பார்கள். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படும். அதேபோல், பரம்பரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவீர்கள். 

காதல் வாழ்க்கையில் நிறைய அன்னோநியமான சம்பவங்கள் நடக்கும். உங்க காதலை வீட்டில் சொல்லவும் அற்புதமான காலக்கட்டம். ஆக மொத்தம் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சகஊழியர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ளுங்கள். தொழிலில் புதுக்கூடாளிகள் சேர்ப்பதை தவிர்க்கவும். விவசாயிகள் புதிய முயற்சிகள் தொடங்குவதை தவிர்க்கவும். இந்த மாதத்தில் பூர்வீக சொத்து வாங்குவதை தவிர்க்கவும்.  

பரிகாரம்: தினமும் விநாயகர் வழிபாடு செய்யவும். மாதத்தில் ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியை கொடுக்கும். பிறந்த நட்சத்திரத்தின் போது அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 6, 9

சந்திராஷ்டம நாள்: 1, 2, 28, 29


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்