Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அர்த்தாஷ்டம சனி ஆரம்ப காலம்.. ஜாக்கிரதை இருக்கனும் விருச்சிக ராசியினரே.. | January Month Rasi Palan 2023 Viruchigam

Nandhinipriya Ganeshan Updated:
அர்த்தாஷ்டம சனி ஆரம்ப காலம்.. ஜாக்கிரதை இருக்கனும் விருச்சிக ராசியினரே.. | January Month Rasi Palan 2023 Viruchigam  Representative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

அர்த்தாஷ்டம சனி ஆரம்ப காலம்.. ஜாக்கிரதை இருக்கனும் விருச்சிக ராசியினரே.. | January Month Rasi Palan 2023 Viruchigam  Representative Image

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினரே! மாதத்தின் ஆரம்பத்தில் செவ்வாய் உங்க ராசிக்கு 7வது வீட்டில் வக்கிரம் அடைந்திருப்பதால் ஒருவிதமான சலிப்பு காணப்படும். பணியிடத்தில் நம்மலால் முன்னேற முடியவில்லையே என்ற கலக்கம் ஏற்படும். பணியிடத்தில் சில மாற்றங்கள் நடைபெறும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது.  

ஆனால், 13ஆம் தேதிக்கு பிறகு அற்புதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். அர்த்தாஷ்டம சனி நெருங்கிவருவதால், எந்த செயலிலும் உழைப்பு கடினமாக இருந்தால் வெற்றி நிச்சயம். சில விஷயங்கள் தடைப்பட்டு நிற்கும். அதேபோல், பணியிடத்தில் உங்களுக்கு கீழ்பணிபுரிபவர்களின் பொறாமைக்கும் ஆளாகுவீர்கள். 

அர்த்தாஷ்டம சனி ஆரம்ப காலம்.. ஜாக்கிரதை இருக்கனும் விருச்சிக ராசியினரே.. | January Month Rasi Palan 2023 Viruchigam  Representative Image

எனவே, சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை குறைத்துக் கொள்வது உத்தமம். மற்றவர்களிடம் ஆபிஸ் ரகசியத்தை பகிர வேண்டாம். அதுவே ஆப்பாக மாறிவிடும். சனிபகவானின் பார்வை உங்க ராசி மீது விழுவதால் நீங்க நல்லது செய்தால் நல்லது நடக்கும்; கெட்டது செய்தால் 10 மடங்கு கெட்டது நடக்கும். எனவே பொய், பொறாமை குணத்தை தவிர்ப்பது நல்லது. சுருக்கமாக தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும். 

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. அதேபோல், சனிக்கிழமைகளை மாலை நேரத்தில் மண் விளக்கில் எள் முடிச்சு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சனிபகவானை வணங்குங்கள். கருப்புநிற ஜீவராசிகளுக்கு உணவு கொடுப்பது சிறப்பு. 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டம நாள்: 5, 6, 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்