Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த மாதம் கும்ப ராசிக்காரங்களுக்கு கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாறி!| January Month Rasi Palan 2023 Kumbam

Gowthami Subramani Updated:
இந்த மாதம் கும்ப ராசிக்காரங்களுக்கு கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாறி!| January Month Rasi Palan 2023 Kumbam  Representative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் கும்ப ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இந்த மாதம் கும்ப ராசிக்காரங்களுக்கு கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாறி!| January Month Rasi Palan 2023 Kumbam  Representative Image

மாதத் தொடக்கமான இந்த ஜனவரி மாதத்தில், முக்கிய கிரகங்கள் அனைத்து, உங்களுடைய ராசிக்கு லாபஸ்தானத்தில் இருப்பதால், கும்ப ராசி நேயர்களுக்கு எந்த வித பிரச்சனைகளும் இல்லை. அடுத்தடுத்து, எல்லா கிரகங்களும் விரயஸ்தானத்தில் வருதல், மற்றும் சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருவதாலும் 15 நாள்களுக்குப் பின், சிறிது சுமாராக இருக்கும். உங்க ராசிக்குள்ளேயே சனிபகவான் ஜென்ம ராசியாகவே வருவதால் சிறிது கஷ்டங்களைத் தரும். புதன் வக்கிரகதியில் லாபஸ்தானத்தில் இருக்கிறார். 8 ஆம் தேதிக்குப் பின், வக்கிர நிவர்த்தி அடைவதால், இவருக்கு ஓரளவுக்கு நன்மை நடக்கும்.  இந்த சூழ்நிலையில், கடன் அடைக்க கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கும்.

இந்த மாதம் கும்ப ராசிக்காரங்களுக்கு கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாறி!| January Month Rasi Palan 2023 Kumbam  Representative Image

சுக்கிரன் வக்கிரஸ்தானத்தில் இருப்பதால், திடீர் விரய செலவு உண்டாக வாய்ப்புண்டு. வெளியிடங்களில் பிள்ளைகளை வெளியில் தங்க அனுமதிக்க வேண்டும். செவ்வாய் பகவானும் வக்ர நிவர்த்தி அடைவதால், சகோதரன் மூலம் நன்மை ஏற்பட வாய்ப்புண்டு. எந்த காரியத்திலும் திட்டம் போட்டு செய்து எதிர்பார்த்ததை முடித்து விடுவீர்கள். அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகளைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருப்பதால், புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை உருவாகும். கொடுக்கல், வாங்கலை முழுவதுமாக தவிர்த்து விடுவது நல்லது. இதனால், பெரும் நஷ்டம் உண்டாக வாய்ப்புள்ளது.

இந்த மாதம் கும்ப ராசிக்காரங்களுக்கு கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாறி!| January Month Rasi Palan 2023 Kumbam  Representative Image

சனி பகவான், ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு வருவதால், உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. திடீர் உடல்நிலைப் பிரச்சனைகள் உண்டாகும். இதில் முதலில் பிரச்சனை உண்டாவது வயிற்றில் தான். எனவே, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். இது போல, பிரச்சனைகள் இருந்தாலும், மாதத்தில் சில தொழில் தொடர்பான நன்மைகளும் கிடைக்கும். இது மாணவர்களுக்கு பொதுவாக நல்ல மாதமாக அமைகிறது. இந்த மாதத்தில் ஜென்ம சனி வருவதால், சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

பரிகாரம்: ஜென்ம சனி வருவதால், தினந்தோறும் குளித்து விநாயகப் பெருமானை வணங்கி அன்றைய நாளைத் தொடங்கவும். சனிக்கிழமை தோறும், ஆஞ்சநேய வழிபாடு செய்வதுடன், மாலை நேரத்தில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்:  1, 3, 6, 9

சந்திராஷ்டம நாள்: 13, 14


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்