Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆசைச் சொற்களை நம்பினால் இந்த நிலை தான் உண்டாகும். மீன ராசிக்காரர்களே கவனம்!| January Month Rasi Palan 2023 Meenam

Gowthami Subramani Updated:
ஆசைச் சொற்களை நம்பினால் இந்த நிலை தான் உண்டாகும். மீன ராசிக்காரர்களே கவனம்!| January Month Rasi Palan 2023 Meenam  Representative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் மீன ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

ஆசைச் சொற்களை நம்பினால் இந்த நிலை தான் உண்டாகும். மீன ராசிக்காரர்களே கவனம்!| January Month Rasi Palan 2023 Meenam  Representative Image

இந்த புது வருடப்பிறப்பான 2023 ஆம் ஆண்டு முழுவதுமே, மீன ராசிக்காரர்கள் ஏழரை சனி ஆரம்பிப்பதால் பயமுடனே வருடம் முழுவதும் இருப்பர். ஆனால், அப்படி எந்த வித பிரச்சனைகளும் உங்களுக்கு நேரப் போவதில்லை. அதன் படியே, இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் கல்வி சம்பந்தமான முயற்சிகளிலும், வேலை முயற்சிகளிலும் நல்லதே நடக்கும். உடன்பிறப்புகள் நல்ல முன்னேற்றம் அடைவர். இதனால், மனம் மகிழக் கூடிய நாளாக அமைகிறது. விரயச் செலவு செய்வது நல்லதாக அமையும்.

ஆசைச் சொற்களை நம்பினால் இந்த நிலை தான் உண்டாகும். மீன ராசிக்காரர்களே கவனம்!| January Month Rasi Palan 2023 Meenam  Representative Image

தொடர்ச்சியாக சனிபகவான் உங்க ராசியைப் பார்த்த பார்வை, இந்த மாதத்தில் முற்றிலும் மாறி நல்ல பலன்களைத் தரும். ஏழரை சனியால் உங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகள் உண்டாகக் கூடிய மாதமாக அமைகிறது. இதுவரை இருந்த உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் விலகி நன்மை பயப்பவையாக உள்ளது. ஒன்று செய்ய வேண்டும் என்று மீன ராசிக்காரர்கள் நினைத்தால், அதனை உடனடியாக நிறைவேற்றும் மாதமாக அமைகிறது.

ஆசைச் சொற்களை நம்பினால் இந்த நிலை தான் உண்டாகும். மீன ராசிக்காரர்களே கவனம்!| January Month Rasi Palan 2023 Meenam  Representative Image

தொழில் சார்ந்த விஷயத்தில், முதலீடாக நீங்கள் உங்களுடையே சேமித்த பணத்தில் செலவு செய்வது நல்லது. கூட்டு முயற்சி அரவே வேண்டாம். கடன் வாங்குதலை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வாகனம் சார்ந்த தொழில்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எனவே, தாராளமாக வண்டி, வாகனம் வாங்கி வாடகைக்கு விடுதல், சொந்த பயனிற்காக வாகனம் வாங்குதல் என அனைத்துமே நன்மையைத் தரும். பெரும்பாலும் முதலீடு சார்ந்த விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீண் ஆசைச் சொற்களை நம்ப வேண்டும். இது பெருமளவு நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கும்.

பரிகாரம்: தினந்தோறும் விநாயகப் பெருமானின் வழிபாடு நன்மையைக் கொடுக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீப வழிபாடு செய்யலாம். ஜனவரி 17 சனிப்பெயர்ச்சி அன்று, நவகிரகத்தில் உள்ள சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டம நாள்: 15, 16


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்