Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

பாடாய் படுத்திய ஏழரை சனி.. நல்ல காலம் பொறந்தாச்சு.. பரிகாரம் இதுதான்.. | January Month Rasi Palan 2023 Dhanusu

Nandhinipriya Ganeshan Updated:
பாடாய் படுத்திய ஏழரை சனி.. நல்ல காலம் பொறந்தாச்சு.. பரிகாரம் இதுதான்.. | January Month Rasi Palan 2023 Dhanusu  Representative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் தனுசு ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

பாடாய் படுத்திய ஏழரை சனி.. நல்ல காலம் பொறந்தாச்சு.. பரிகாரம் இதுதான்.. | January Month Rasi Palan 2023 Dhanusu  Representative Image

குருபகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசியினரே! ஏழரை சனியால் வாழ்க்கையில் கடந்த ஏழரை ஆண்டுகளில் எத்தனையோ இழப்பு, அவமானம், துன்பம் என படாதுபாடு பட்டிருப்பீர்கள். ஆனால், அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் மாதமாக இந்த ஜனவரி உங்களுக்கு அமைந்திருக்கிறது. அதாவது, வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி பிறகு உங்களுக்கு ஏழரை சனி முற்றிலுமாக விலகுகிறது. இனி நல்ல காலம் பிறந்துவிட்டது என்றே சொல்லலாம். 

மாதத்தின் தொடக்கத்தில் புதன் உங்க ராசிக்கு 7வது வீட்டிற்கும் 10வது வீட்டிற்கும் அதிபதியாக இருந்து வக்கிர நிலை அடைகிறார். இதனால், குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை, சச்சரவு ஏற்படும். வாரிசு, வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் ஏற்படும். அனுசரித்து போவது குடும்பத்தில் குழப்பத்தை குறைக்கும். ஜனவரி 8 ஆம் தேதி வரை பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். 

பாடாய் படுத்திய ஏழரை சனி.. நல்ல காலம் பொறந்தாச்சு.. பரிகாரம் இதுதான்.. | January Month Rasi Palan 2023 Dhanusu  Representative Image

8ஆம் தேதிக்கு பிறகு தொழில் லாபம் இரட்டிப்பாகும். பணியிடத்தில் இருந்துவந்த பணிச்சுமை நீங்கும். சகஊழியர்களின் உதவி கிடைக்கப் பெறுவதோடு, உங்களுக்கு சாதமாகவும் இருப்பார்கள். 13 ஆம் தேதி செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைவதால், உடன்பிறப்புகளுடன் இருந்து வந்த சண்டை, சச்சரவு, கருத்து மோதல் சரியாகும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். 

8ஆம் தேதிக்கு பிறகு திருமண யோகம் உண்டு. பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். இருப்பினும், சனி பகவான் உங்க ராசியில் இருந்து விலகுவதால், சுபவிரைய செலவுகள் காணப்படும். கடந்த ஏழரை ஆண்டுகளால் கஷ்டத்தை மட்டுமே சந்தித்த தனுசு ராசிக்காரர்களுக்கு பொற்காலம் பிறந்தாச்சு. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் அனைத்தும் விலகி, லாபம் அதிகரிக்கும் மாதமாக இருக்கும்.

பாடாய் படுத்திய ஏழரை சனி.. நல்ல காலம் பொறந்தாச்சு.. பரிகாரம் இதுதான்.. | January Month Rasi Palan 2023 Dhanusu  Representative Image

சொந்த தொழில் தொடங்க அற்புதமான காலக்கட்டம். வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் மாதமாகவும் உள்ளது. தொழில் ரீதியாகவோ, வேலை ரீதியாகவோ பேசுகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். 

பரிகாரம்: சனிப்பெயர்ச்சி நாளன்று 30 வயதுக்கு கீழிருப்பவர்கள் திருநள்ளாறு சென்று நலன்குளத்தில் நீராடி சனிபகவானை வழிபாடு செய்யவும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருக்கொல்லி காடு சென்று சனிபகவானை வழிபாடு செய்யவும். அல்லது குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கும் செல்லலாம். அல்லது உள்ளூரில் இருக்கும் நவகிரக சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி, எள் சாதத்தை நைவேத்தியமாக படைத்து, கருப்பு வஸ்திரத்தை தானம் செய்யவும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 6

சந்திராஷ்டம நாள்: 11, 12


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்