Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜென்ம சனியால் பட்ட அனைத்து கஷ்டத்துக்கும் விடிவுகாலம் வந்தாச்சு.. | January Month Rasi Palan 2023 Magaram

Nandhinipriya Ganeshan Updated:
ஜென்ம சனியால் பட்ட அனைத்து கஷ்டத்துக்கும் விடிவுகாலம் வந்தாச்சு.. | January Month Rasi Palan 2023 Magaram  Representative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் மகர ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

ஜென்ம சனியால் பட்ட அனைத்து கஷ்டத்துக்கும் விடிவுகாலம் வந்தாச்சு.. | January Month Rasi Palan 2023 Magaram  Representative Image

ஜென்ம சனியால் பட்ட கஷ்டம் அனைத்திற்கும் விடிவுகாலம் பிறக்கப்போகிறது. அதாவது, இந்த மாதத்தில் நடக்கவிருக்கும் சனிப்பெயர்ச்சியின் போது ஜென்ம சனி என்ற கொடுமையான காலக்கட்டத்தை விட்டு வெளியில் வரப்போகிறீர்கள். மேலும், சனிபகவான் பாத சனி, குடும்ப சனியாக மாறுவதால் தன்நம்பிக்கை அதிகரித்துக் காணப்படும். தொழில் ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன் உங்க ராசியில் இருப்பதால், தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

திடீர் தனவரவு கிடைக்கப்பெறுவீர்கள். புதிய முயற்சிகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். தொழில் இருந்த எதிரிகள் குறைவார்கள். கொடுக்கல், வாங்கலில் இருக்கும் தொல்லை அனைத்தும் சரியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் சரியாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும் காலக்கட்டம்.

ஜென்ம சனியால் பட்ட அனைத்து கஷ்டத்துக்கும் விடிவுகாலம் வந்தாச்சு.. | January Month Rasi Palan 2023 Magaram  Representative Image

பணியிடத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். அதேபோல், வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகமாகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. ஜனவரி 8ஆம் தேதிக்கு பிறகு புதன் வக்கிர நிலையடைவதால் தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.

வழக்கு விவராங்கள் சாதகமான பலன்களை கொடுக்கும். நினைத்த காரியம் நிறைவேறும் மாதமாகவும் இந்த ஜனவரி மாதம் இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும். புதிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலப் பலன்களை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அரசாங்க உதவி கிடைக்கப் பெறுவீர்கள். 

ஜென்ம சனியால் பட்ட அனைத்து கஷ்டத்துக்கும் விடிவுகாலம் வந்தாச்சு.. | January Month Rasi Palan 2023 Magaram  Representative Image

உங்க ராசி அதிபதியான சனிபகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சியாவதால் உடல்ரீதியாக இருந்த பிரச்சனைகள் விலகும். இருப்பினும், திருமண வாழ்க்கையில் சின்ன சின்ன பிணக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனுசரித்து போவது உத்தமம். 

பரிகாரம்: தினமும் குலதெய்வத்தை மனதில் நினைத்து வணங்கிவிட்டு பணிகளை தொடங்குங்கள். சனிப்பெயர்ச்சியன்று சனிபகவானை மனதார வணங்கிவிட்டு, பசு மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டம நாள்: 10, 11, 12


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்