Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | மீனம் ராசியினர் இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்.. 29.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | மீனம் ராசியினர் இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்.. 29.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 14 ஆம் நாள் வியாழக்கிழமை  [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - நிம்மதி

விருச்சிகம் - உழைப்பு

தனுசு - உற்சாகம்

மகரம் - நிதானம்

கும்பம் - அலைச்சல்

மீனம் - சுறுசுறுப்பு

நல்ல நேரம்:

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: -

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [29.12.2022]

Nalaya Rasi Palan | மீனம் ராசியினர் இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்.. 29.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் | Thulam Nalaya Rasi Palan

பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இவ்வளவு நாட்களாக இருந்த வந்த கடன் பிரச்சனைகள் குறையும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை ஏற்படுத்தும். எதிர்பாரா உதவிகள் தேடி வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு தராமாக இருக்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. கண் சம்பந்தமான பிரச்சனை இருந்தால் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | மீனம் ராசியினர் இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்.. 29.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் | Viruchigam Nalaya Rasi Palan

உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை இருக்கும். உங்க துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். இதனால், விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சகஜமாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தேவையற்ற செலவுகள் வரும். பணவரவு விஷயத்தில் சற்று மந்தமாக தான் இருக்கும். தூக்கமின்மையும், தோல் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | மீனம் ராசியினர் இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்.. 29.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு | Dhanusu Nalaya Rasi Palan

சுறுசுறுப்பாக இருப்பீர்கள், எந்த காரியத்தையும் வழக்கத்தைவிட மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். உங்க பேரக் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்க துணையுடன் பணம் சம்பந்தமான பிரச்சனைகளால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் ஒரு சூப்பரான திருப்பத்தை காண்பீர்கள். இதுவரை கடுகடுவென்று நடந்துக்கொண்ட உங்க பாஸ் இன்று கூலாக நடந்துக் கொள்வார். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | மீனம் ராசியினர் இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்.. 29.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் | Magaram Nalaya Rasi Palan

சில விஷயங்கள் கசப்பான தருணத்தை உருவாக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வருமானம் சிறப்பாகவே உள்ளது. எதிர்பாரா பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இருவருக்கும் இடையில் ஆனந்தமும் அன்பும் பொங்கும். ஆரோக்கியத்தை பொறுத்த வரையில், செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | மீனம் ராசியினர் இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்.. 29.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் | Kumbam Nalaya Rasi Palan

பல சவால்களை சந்திக்க தயாராக இருந்துக் கொள்ளுங்கள். கவனக்குறைவு காரணமாக பணியில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். அவரின் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்டு எதையும் பேச வேண்டும். இன்று வீண் செலவுகள் வரும், பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். இன்று ஓய்வு என்பதே கிடைக்காது. அதுவே வெறுப்பை உண்டாகும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | மீனம் ராசியினர் இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்.. 29.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் | Meenam Nalaya Rasi Palan

சுறுசுறுப்பாக இருப்பீர்கள். முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிட்டும். கோபத்தால் சின்ன விஷயத்தை பெரியதாக்குவீர்கள் - அது குடும்பத்தினரை அப்செட் ஆக்கும். நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். சில நல்ல காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். வங்கி சம்பந்தமான விஷயங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையோடு இருக்கவும். சுறுசுறுப்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்