Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | கோபத்தை தவிர்த்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது.. 28.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | கோபத்தை தவிர்த்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது.. 28.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 13 ஆம் நாள் புதன்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - செலவு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - உற்சாகம்

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - அனுகூலம்

மீனம் - பொறுமை

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [28.12.2022]

Nalaya Rasi Palan | கோபத்தை தவிர்த்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் | Thulam Nalaya Rasi Palan

சுமாரான நாளாக தான் இருக்கும். எனவே, அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். அனைவரிடம் சகஜமான அணுகுமுறை வேண்டும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பணவரவு வசூலாகும். மனதளவில் ஒரு புதுவிதமான தெளிவும் தெம்பும் உண்டாகும். இருப்பினும், செலவுகள் அதிகரித்து காணப்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | கோபத்தை தவிர்த்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் | Viruchigam Nalaya Rasi Palan

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. இல்லையென்றால், விளையாட்டு விணையாகிவிடும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதன் மூலம் உங்க திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | கோபத்தை தவிர்த்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு | Dhanusu Nalaya Rasi Palan

வீடு, மனை வாங்குவதற்கான யோகம் உண்டு. புதிய முயற்சிகள் சிக்கல் உருவாகும். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். பணியிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். அனாவசிய செலவை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | கோபத்தை தவிர்த்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் | Magaram Nalaya Rasi Palan

தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும். உங்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் எழும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவது நல்லது. மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | கோபத்தை தவிர்த்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் | Kumbam Nalaya Rasi Palan

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான நாள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடி வரும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். சேமிப்பு உயரும். உங்க துணையுடன் மறக்க முடியாத நாளாகவும் இருக்கும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | கோபத்தை தவிர்த்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் | Meenam Nalaya Rasi Palan

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் தேடி வரும். கடன்களை திருப்பி வாங்கும் போது கனிவான பேச்சு அவசியம். துணையுடன் சேர்ந்து நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவால் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்