Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 21 ஆம் நாளுக்கான [04 பிப்ரவரி 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

தேவையில்லாத பிரச்சனைகளால் எதிரிகள் தோன்றுவார்கள். எனவே, மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். பணியிடத்தில் மற்றவர்களுக்கும் சேர்த்து நீங்க வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சிலர் நீண்ட நாள் கழித்து உறவுகளை சந்திப்பீர்கள். பயணத்தின் போது விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வீண் செலவுகள் தேடி வரும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் பெற்றோரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. மனைவியால் ஏற்பட்ட பிரச்சனை நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழர் ஏற்படும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். இல்லையென்றால், வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிர்பாராத செலவுகள் கவலையை கொடுக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் சிந்தித்து செயல்படவும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தம்பதிகளுக்கு இடையே அன்பு மிகுந்து ஒருவருக்கொருவர் அனுசரித்து பேரின்பம் அடைவர். எந்த செயலையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்வீர்கள். ஆசைகள் நிறைவேறும் நாள். விருந்தினர் வருகையால், குடும்பத்தில் சந்தோசம் பெருகும். நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கி, பாசம் அதிகரிக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணியிடத்தில் வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கவும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இணையதளம் சார்ந்த தொழில் செய்வோருக்கு அற்புதமான நாள். அனைவரிடமும் பாசமாக நடந்துக் கொள்வீர்கள்.  சிலர் பிறருக்கு பணஉதவி செய்வீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் ஏற்படும் திடீர் வாக்குவாதம் மோதலில் முடியும். எனவே, எச்சரிக்கையாக இருக்கவும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது, சுதாரித்துக் கொள்ளுங்கள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துவர்கள் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்த இழுபறிகள் நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சி கைகூடும். சிலருக்கு கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். காதலர்களுக்கு அற்புதமான நாள். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். புதிய நபர்களால் கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். வாகனத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும், இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். பணியிடத்தில் மேலதிகாரியிடம் பேசும்போது கவனமாக பேசவேண்டும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். எந்த காரியத்தையும் சுறுசுறுப்பாகவும், விவேகத்துடன் ஆற்றுவீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த தொழில் செய்வோருக்கு அனுகூலமான நாள். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.  ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் வெற்றியைத் தரும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

கடன் கொடுத்தவர்களால் குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நினைத்து காரியங்கள் நிறைவேறுவதில் தடை ஏற்படலாம். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகளை எதிர்க்கொள்ள நேரும். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். மிகவும் பிடித்த பொருளை தொலைக்க வாய்ப்புள்ளது. தோல்வி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

மகிழ்ச்சிகரமான நாள். பணியிடத்தில் சகஊழியர்களிம் அன்பாக நடந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்தத்தன்மை விலகி லாபம் அதிகரிக்கும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். ஆசைப்பட்ட விஷயங்களை செய்து மகிழ்ச்சியடைவீர்கள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயல்படவும். ஆன்மீக வழிபாடு மேற்கொள்வீர்கள். மலை சார்ந்த இடங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இன்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | 04 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்களால் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. திடீர் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி விளையாடும். சொத்து விவகாரத்தில் பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். துணையிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகி, மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் சிறப்பாக இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்