Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குரு, கேது தரும் பலனால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்குச் செல்லும் கன்னி ராசி! | Kanni February Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
குரு, கேது தரும் பலனால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்குச் செல்லும் கன்னி ராசி! | Kanni February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: கன்னி ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய்,  6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் கன்னி ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

குரு, கேது தரும் பலனால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்குச் செல்லும் கன்னி ராசி! | Kanni February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

பொருளாதாரத்திலும் உங்களது உயர்வு நன்றாக இருக்கும். கடனை அடைப்பதற்கும், செல்வம் சேர்தல் என பொருளாதார ரீதியாக நல்ல பயன்கள் கிடைக்க உள்ளது. கெட்டவை அனைத்தும் விலகி, நல்லவை அனைத்தும் கூடும். திருமணப் பலன் அருமையாக உள்ளது. இந்த பிப்ரவரி 15-க்குப் பிறகு, குரு மற்றும் கேது என இருவருமே இணைந்து அற்புத பலன்களைத் தர உள்ளனர். திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் ஆகாத நபர்களுக்கும் திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அனைத்தும் நன்றாக அமையக் கூடும்.

இந்த மாதம் காதலர்களுக்கும் சிறந்த மாதமாக அமையும். காதலர்கள் அடுத்த கட்டமாக திருமணப் பேச்சும் கைகூடும். இவர்களுக்கு பொருளாதாரத்தில் எல்லா விதமான உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வி சிறப்பாக உள்ளது. இதுவரை இருந்த மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவை நீங்கி உங்களுடைய அனைத்து செயல்களும் மாறும். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவு கிடைக்கும். நீண்ட நாள்களாக இருந்த பிரச்சனைகள் விலகி, மன நிறைவு உண்டாகும்.

குரு, கேது தரும் பலனால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்குச் செல்லும் கன்னி ராசி! | Kanni February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கன்னி ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்பு மிகச் சிறப்பாக உள்ளது. இது வரை கஷ்டப்பட்ட அனைத்துமே விலகி நல்ல அதிர்ஷ்ட வாய்ப்பாக அமையும். புதன் ஆதிக்கம் கொண்ட அனைவருக்குமே இந்த மாதம் சிறப்பாக உள்ளது. அதிலும் கன்னி ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவர். பிப்ரவரி 15-ல் சுக்கிரன் பார்வை உங்கள் ராசியின் மீது விழும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கப் போகும் மாதமாக அமைகிறது. இது ஒரு நல்ல மாற்றத்தை உங்களுக்குக் கொடுக்கும். தொழிலும், உத்தியோகத்திலும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு மன நிறைவை அளிப்பதுடன், நல்ல வளமான வாழ்க்கையையும் தரும்.

குரு, கேது தரும் பலனால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்குச் செல்லும் கன்னி ராசி! | Kanni February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

உடல்நலத்தைப் பொறுத்த வரை இந்த மாதம் கன்னி ராசி நேயர்களுக்குச் சிறப்பாக உள்ளது. பெரும்பாலும், பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது நோய்களை விலக்கி விடும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்சாகத்துடன் செயல்படும் மாதமாக இந்த பிப்ரவரி மாதம் உள்ளது. வயதில் மூத்தவர்களும், பெரிய அளவிலான விளைவைச் சந்திக்க மாட்டார்கள். பெரும்பாலும், அவர்களுக்கு உடல் நிலை சிறப்பானதாகவே உள்ளது.

கன்னி ராசிக்கு 6 ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார். இது உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். நீங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களும் விலகி விடும். இந்த மாதம் எந்த வித தடைகளும் இல்லாமல், சிறப்பாக இருக்கும். சிறிதாக ஒன்றிரண்டு பிரச்சனைகளைச் சந்தித்தாலும், பெரிதளவு எந்தப் பாதிப்பும் இல்லை. ராகு 2 ஆம் இடத்தில், கேது 8 ஆம் இடத்திலும் இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு நாள்கள் உடல்நிலை சார்ந்த பிரச்சனைகள் வரும். ஆனால், இது பெரிதளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 6

சந்திராஷ்டம நாள்: 24, 25, 26

பரிகாரம்: குலதெய்வத்தை வழிபடுவது நல்ல பலன்களை அளிக்கக் கூடியதாக அமைகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்