Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

எக்கச்சக்க கடன் இருந்தாலும் நீங்கும் காலம் இது | Kanni March Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
எக்கச்சக்க கடன் இருந்தாலும் நீங்கும் காலம் இது | Kanni March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: கன்னி  ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் கன்னி ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

எக்கச்சக்க கடன் இருந்தாலும் நீங்கும் காலம் இது | Kanni March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கன்னி ராசியின் அதிபதி சனி பகவானுடன் சஞ்சாரம் செய்வதால் மருத்துவம் சம்மந்தமான செலவுகள் வரும். எனவே, உடல் நலத்தில் அக்கறைக் கொண்டு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சங்கடங்கள் வந்து நீங்கும். விரக்தியான மனநிலையில் இருப்பதால் பேசுவதில் கவனம் வேண்டும். வருமானத்தில் எந்த பஞ்சமும் இருக்காது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.

எக்கச்சக்க கடன் இருந்தாலும் நீங்கும் காலம் இது | Kanni March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

வராத பண வரவு வந்து சேரும். முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண யோகம் வரமால் இருந்த காலம் மாறி நல்ல வரன் அமையும். சுப காரியங்களுக்கான செலவு இருக்கும். இடமாற்றத்திற்கு ஏற்ற மாதம். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும். வழக்கு சம்மந்தமான பிரச்சனை இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்