Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லாபம் நிறைந்த மாதமாக இருக்கும் | Viruchagam March Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
லாபம் நிறைந்த மாதமாக இருக்கும் | Viruchagam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: விருச்சகம்   ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான விருச்சகம்  ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் விருச்சகம்  ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

லாபம் நிறைந்த மாதமாக இருக்கும் | Viruchagam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கூட்டுத் தொழில் செய்யும் யோசனை வரலாம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். உடல் ரீதியான பிரச்சனைகள் வரலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்ளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியான மாதமாக இருக்கும். காதல் கை கூடி வரும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வெளியூர் பிரயாணம் செய்யும் வையுங்கள் அமையும். தந்தை வழி பூர்வீக சொத்து வந்து சேரும்.

லாபம் நிறைந்த மாதமாக இருக்கும் | Viruchagam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

வருமானத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தேவையான செலவுகளை மேற்கொள்வீர்கள். கடன் சுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நீங்கள் மேற்கொண்ட அவமானங்கள் நீங்கி வெற்றி நோக்கிய பாதையில் செல்வீர்கள். மன கஷ்டத்தால் உடல் நலத்தில் பல பிரச்சனைகள் இருந்திருக்கும். அவை அனைத்தும் படி படியாக குறையும். வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும் மாதமாக அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்