Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காதலர்களுக்கு குட் நியூஸ் உங்க லவ் சக்சஸ் ஆகும் | Thulam March Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
காதலர்களுக்கு குட் நியூஸ் உங்க லவ் சக்சஸ் ஆகும் | Thulam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: துலாம்  ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் துலாம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

காதலர்களுக்கு குட் நியூஸ் உங்க லவ் சக்சஸ் ஆகும் | Thulam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

இதுவரை தொந்தரவு செய்யும் உடல் பிரச்சனைகள் குறியும். எந்த ஒரு விஷயத்திலும் நாட்டம் செலுத்தாமல் இருப்பீர்கள். கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருப்பீர்கள், ஆனால் தற்போது நம்பிக்கை வந்து வழிபடுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். கடன் சுமைகள் குறையும். இருப்பினும் மற்ற தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். காதல் திருமணம் வெற்றிகரமாக அமையும். பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் அரசு வேலை கிடைக்கும்.

காதலர்களுக்கு குட் நியூஸ் உங்க லவ் சக்சஸ் ஆகும் | Thulam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

நீண்ட நாளாக வழக்கு பிரச்சனையாக இருந்தால் அது சுமுகமாக முடியும். புதிய தொழில் செய்ய முயற்சிக்கலாம். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியும் லாபமும் அமையும் மாதம் இது. திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடி வரும் மாதமாக அமையும். தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் வரலாம். அதனால் பிரியும் அளவிற்கு கூட செல்லலாம். எனவே, பேச்சு வார்த்தையில் கவனம் தேவை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்