Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா இந்த ஒரு விஷயம் மட்டும் கவனம் | Simmam March Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா இந்த ஒரு விஷயம் மட்டும் கவனம் | Simmam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சிம்மம்  ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் சிம்மம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா இந்த ஒரு விஷயம் மட்டும் கவனம் | Simmam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசியின் அதிபதி சனி பகவானுடன் இருப்பதால் ஆரம்ப காளத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆகையால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போவது நல்லது. மிகுந்த குழப்பத்தில் இருப்பீர்கள் அதனால் எந்த செயலையும் சரியாக செய்ய முடியாது. நண்பர்களுடன் கருத்து மோதல் ஏற்படலாம். எனவே, தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். உடல் சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம் எச்சரிக்கையுடன் இருங்கள்.

எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா இந்த ஒரு விஷயம் மட்டும் கவனம் | Simmam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

முதலீடு தொழில் செய்பவராக இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். ஏதேனும் காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். சுப காரியங்கள் கை கூடி வரும் மாதமாக அமையும். குடும்பத்தை தாங்கும் பொருளாதாரம் பற்றிய கவலை வேண்டாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அமையும். தள்ளி தள்ளி போன திருமண யோகம் கை கூடி வரும்.

எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா இந்த ஒரு விஷயம் மட்டும் கவனம் | Simmam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மாணவர்கள் நல்ல புத்திக் கூர்மையுடன் படிப்பார்கள். அவர்கள் நினைத்த படிப்பை படிக்க நன்றாக உழைப்பார்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்கள் நிம்மதியாக இருக்கும் காலமாக மையும். மாதத்தின் தொடக்கத்தில் சற்று சிக்கல் இருந்தாலும் அது சரியாகிவிடும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்