Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

கண்டக சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Kantaka Sani Pariharam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கண்டக சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Kantaka Sani Pariharam in TamilRepresentative Image.

நம் வாழ்க்கையில் அதிக கஷ்டங்கள் வந்தால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது சனி பகவான் தான். ஏனென்றால், நீதிகாரகனான சனி பகவான் வாழ்க்கையில் ஒருவர் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் பெயர்ச்சிக் காலத்தில் தண்டனையை கொடுப்பார். ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டக சனி என பல சனி பெயர்ச்சிகள் இருக்கின்றன. அந்த வகையில், ஒருவருக்கு கண்டக சனி இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கண்டக சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Kantaka Sani Pariharam in TamilRepresentative Image

கண்டக சனி என்றால் என்ன?

ராசியில் நடைபெறும் ஒவ்வொரு சனி பெயர்ச்சியும் நம் ராசியில் இருக்கும் சந்திரனை பொறுத்தே அமைகிறது. சனி கிரகம் சந்திரனுக்கு முன்னும் பின்னும் அல்லது சந்திரனோடு இணைந்தோ சஞ்சாரம் செய்தால் அதற்கு ஏழரை சனி என்று பெயர். அதேபோல், ராசியில் 7 ஆம் இடத்தில் கோச்சார சனி வந்தால் அதை கண்டக சனி என்று சொல்வார்கள். 7 ஆம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது. ஒருவருக்கு கண்டக சனி ஏற்பட்டால் கழுத்தை பிடிக்கும் அளவிற்கு பிரச்சனை இருக்கும்.

கண்டக சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Kantaka Sani Pariharam in TamilRepresentative Image

கண்டக சனி என்ன செய்யும்?

கண்டக சனி உங்க ராசிக்கு வந்தால் திருமண வாழ்க்கையில் இருந்த நல்லிணக்கம் பாதிக்கப்படும். அதாவது, இதுவரை உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த உங்க துணை, உங்க வார்த்தைகளை மதிக்காமல் எதிர்மறையாக செயல்பட ஆரம்பிப்பார். எனவே, கண்டக சனி காலத்தில் முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 

மாணவர்களுக்கு கண்டக சனி ஏற்பட்டால் படிப்பில் மந்தம் ஏற்படும். நன்றாக மதிப்பெண்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும், கண்டக சனி காலத்தில் அப்படியே பாதியாக குறையும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்காது. ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் அடிக்கடி பிரச்சனை எழுந்த வண்ணம் இருக்கும்.

கண்டக சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Kantaka Sani Pariharam in TamilRepresentative Image

சில சமயங்களில் வேலை பறிப்போகவும் வாய்ப்புள்ளது. அதேபோல், திருமண வயதில் இருக்கும் ராசியினருக்கு கண்டக சனி காலத்தில் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேற இழுத்தடிக்கும். அதுவே, முதியவர்களாக இருந்தால், ஆரோக்கியத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும்.

அதேபோல், எந்த காரியத்திலும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்க கூடாது. நிறுத்தி நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கவனத்தோடு பேச வேண்டும். இருப்பினும், எல்லா ராசிக்காரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அவரவர் ஜாதக அமைப்பை பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கண்டக சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Kantaka Sani Pariharam in TamilRepresentative Image

கண்டக சனி பரிகாரம்:

  • சிவ ஆலய தரிசனமும், நவகிரகத்தில் சனி பகவானின் வழிபாடு, எள் தீபம் ஏற்றுதல் நல்லது.
  • உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம். மேலும் காலை உணவிற்கு முன் மூன்று கருப்பு மிளகு கடித்து சுவைத்து  உண்டு வரவும். 
  • தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து  வைக்கலாம். பின்பு நாய்க்கு உணவிடவும்.
  • தினமும் சூரிய உதியத்தை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கலாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்