Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எடுத்த காரியத்துல வெற்றி தான்..! இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்...| Kumbam March Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
எடுத்த காரியத்துல வெற்றி தான்..! இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்...| Kumbam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் கும்ப ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
 

எடுத்த காரியத்துல வெற்றி தான்..! இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்...| Kumbam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஜென்ம ராசியில் சனி இருந்து, உடன் புதன், சூரியன் இருப்பதால் உடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை. அப்போ, வருமானத்துலயும் பிரச்சனை வருமானு கேட்டா, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய மாதமாகத் தான் அமைகிறது. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. 
 

எடுத்த காரியத்துல வெற்றி தான்..! இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்...| Kumbam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

உங்கள் ராசிக்கு குரு, சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால், எதாவதொரு விஷயத்தில் வருமானம் கட்டாயம் கிடைக்கும். வீட்டில் புதிய பொருள்களை வாங்குவதற்கான யோகம் உண்டு. ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால், உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். நினைத்த காரியங்களில் வெற்றி கட்டாயம் கிடைக்கும். அதிக அளவில் முதலீடு செய்டு செய்ய எண்ணுவீர். 
 

எடுத்த காரியத்துல வெற்றி தான்..! இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருக்கணும்...| Kumbam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

சனி பகவானின் ஆதிக்கமும் இருப்பதால், முதலீடு செய்யும் போது அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. அதே கூட்டு தொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வீடு கட்டக் கூடிய அனைத்து அமைப்புகளும் உங்களுக்கு உள்ளது. அதே சமயம் தாயாருக்கு உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தாயாரின் உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடு அமையவும் வாய்ப்பு உண்டு. குரு பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரித்து வேண்டிய வரங்களை அருளவிருக்கிறார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்