Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கஷ்டமான பயணத்தின் முடிவு! ஆடம்பர வாழ்க்கை தொடக்கம்.. ஆனா, இதுல கவனம் தேவை! | Meenam March Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
கஷ்டமான பயணத்தின் முடிவு! ஆடம்பர வாழ்க்கை தொடக்கம்.. ஆனா, இதுல கவனம் தேவை! | Meenam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் மீன ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
 

கஷ்டமான பயணத்தின் முடிவு! ஆடம்பர வாழ்க்கை தொடக்கம்.. ஆனா, இதுல கவனம் தேவை! | Meenam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ராசி அதிபதியான சுக்கிரன் ஜென்ம ராசியிலே அமர்வதால், எந்த வித கெடுதலும் ஏற்படாது. மிகப் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உச்ச சுக்கிரன் சேர்ந்திருப்பதால், ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். இது வரை இருந்த கஷ்டங்கள் விலகி, சந்தோஷத்தை அனுபவிக்கப் போகும் மாதமாக இந்த மார்ச் மாதம் உள்ளது. 
 

கஷ்டமான பயணத்தின் முடிவு! ஆடம்பர வாழ்க்கை தொடக்கம்.. ஆனா, இதுல கவனம் தேவை! | Meenam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ராகு இரண்டாம் இடத்தில் இருப்பதால், பேச்சில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்படலாம். கணவன், மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, விட்டுக் கொடுத்துவது செல்வது சிறப்பைத் தரும். முதலீடு செய்வது, கடன் கொடுப்பது போன்றவற்றில் எச்சரிக்கையோடு இருப்பது சிறந்தது. முதலீடு செய்தால், அதிக தொகை கிடைக்கும் எனக் கூறுபவர்களுக்கு என நம்பி ஏமாற வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
 

கஷ்டமான பயணத்தின் முடிவு! ஆடம்பர வாழ்க்கை தொடக்கம்.. ஆனா, இதுல கவனம் தேவை! | Meenam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

இரண்டாம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். வருமானத்துக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. தொழில், வேலைவாய்ப்பில் எந்த தடங்கலும் இன்றி வெற்றியே கிட்டும். செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தால், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு உண்டு. கேது எட்டாம் இடத்தில் இருப்பது உடல் நிலை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உடல் நிலையில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்