Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இப்ப தான் செம்ம உஷாரா இருக்கனும் அதிலும் இந்த விஷயத்தில் | Masi Month Rasi Palan 2023 Meenam in Tamil

Priyanka Hochumin Updated:
இப்ப தான் செம்ம உஷாரா இருக்கனும் அதிலும் இந்த விஷயத்தில் | Masi Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image.

மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் மீனம்  ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இப்ப தான் செம்ம உஷாரா இருக்கனும் அதிலும் இந்த விஷயத்தில் | Masi Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image

மீன ராசிகர்களுக்கு ராசி நாதன் குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருப்பது சிறப்பான பலன்களை அளிக்கும். மாசி மாதமானது மீன ராசியினருக்கு வேலை குறித்த கவலை இல்லாமல் இருக்கும். அதாவது வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, போனஸ் உள்ளிட்ட வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும் மாதமாக அமையலாம். இருப்பினும் உயர் அதிகாரிகளின் குடைச்சல் இருக்கும், அதனால் தளர்ந்து போகாமல் உண்மையாக வேலை செய்யுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

 

இப்ப தான் செம்ம உஷாரா இருக்கனும் அதிலும் இந்த விஷயத்தில் | Masi Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image

தேவையில்லாத செலவுகளை குறைப்பது நல்லது. ஏனெனில் அது உங்களுக்கு விரையமாக மாறவும் வாய்ப்புள்ளது. இடம் மாற்றத்திற்கான அம்சங்கள் இருக்கிறது. அது எதனால் வேண்டுமானாலும் நடைபெறலாம். வழக்குச் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் அதிக கவனம் வேண்டும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். சளி, இதயம், எலும்பு சம்மந்தமான நோய் இருப்பவர்கள் கவனமாக செயல்படவும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். எனவே,விட்டுக்கொடுத்து போவது நல்லது.

இப்ப தான் செம்ம உஷாரா இருக்கனும் அதிலும் இந்த விஷயத்தில் | Masi Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image

தொழில் சார்ந்த இடத்தில் நீங்கள் நினைத்த அளவிற்கு லாபம் வராமல் இருக்கலாம். இருப்பினும் சிறிது காலத்தில் இயல்பு நிலைக்கு மாறிவிடும். முதலீடு செய்பவராக இருந்தால் கவனமாக இருக்கவும். தொழில் செய்பவர்கள் ஆர்வக்கோளாறில் செயல்படாமல் நினைத்தமாக சிந்தித்து செயல்படவும். திருமணம் ஆகாமல் இருபவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்புவர்களுக்கு சத்தமாக இருக்கும் மாதம் இது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்