Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த மாசத்துல இதுமட்டும் வேண்டாம்.. மத்தபடி எல்லாம் ஓகே! | Mesham March Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த மாசத்துல இதுமட்டும் வேண்டாம்.. மத்தபடி எல்லாம் ஓகே! | Mesham March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் மேஷ ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இந்த மாசத்துல இதுமட்டும் வேண்டாம்.. மத்தபடி எல்லாம் ஓகே! | Mesham March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஜென்ம ராசியில் ராகுபகவான் இருப்பதால், இந்த மாதம் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அனைவரிடமும் சின்ன விஷயத்திற்கு அதிகமாக கோபப்படுவீர்கள். உடல் சார்ந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். இருந்தாலும் ராசி அதிபதி தன ஸ்தானத்தில் இருப்பதால் ஆசைகள் நிறைவேறும் மாதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு, பொறுப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திற்காக எதிர்பார்த்த பணஉதவி கட்டாயம் கிடைக்கும்.

இந்த மாசத்துல இதுமட்டும் வேண்டாம்.. மத்தபடி எல்லாம் ஓகே! | Mesham March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

7 ஆம் இடத்தில் கேது சஞ்சாரம் செய்வதால் கணவன் - மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத்தொழில் செய்வோர்கள் பணவிஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தால் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து இறங்க வேண்டும். காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. 11 ஆம் இடத்தில் சனி, சூரியன் புதன் இருப்பதால் பொருளாதார உயர்வு உண்டு. தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். 

இந்த மாசத்துல இதுமட்டும் வேண்டாம்.. மத்தபடி எல்லாம் ஓகே! | Mesham March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மூத்த சகோதரன், சகோதரியால் ஆதாயம் உண்டு. சமீபகாலமாகவே தூக்கமின்மையால் அவதிபட்டு வந்த மேஷ ராசியினருக்கு விடிவுகாலம் பிறக்கும். விவசாயம் செய்வோருக்கு லாபகரமான மாதம். தாயாருடைய பூர்வீக சொத்து கைக்கு வரும். நீண்ட நாட்களாக பணியில் இடமாற்றம் வேண்டும் நினைப்பவர்களுக்கு இந்த மாதம் கிடைக்க வாய்ப்புண்டு. தீராத கடன் படாதுபாடு படுத்திருக்கும். அதிலிருந்தும் விடுதலை பெறபோகிறீர்கள். மாணவர்களுக்கு அற்புதமாக வாய்ப்புள்ளது. 

சந்திராஷ்டம நாள்: 13.03.2023 அதிகாலை 02.18 முதல் 15.03.2023 காலை 07.33 வரை

பரிகாரம்: மதுரை மீனாட்சியம்மனை வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்