Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் 12 ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினரே! இந்த மாசி மாதத்தில் உங்க ராசிநாதன் 2ஆம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் இந்த மாதம் முழுவதுமே உங்களுக்கு அற்புதம் தான். ஏனென்றால், கடந்த சில மாதங்களாகவே வக்கிரநிலையில் இருந்த செவ்வாய் பகவானால் காரியத் தடை, புதிய முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம், கொடுக்கல் வாங்கலில் இழுபறிகள், உத்தியோகத்தில் வீண் பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள். 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ரிஷபம்

ரிஷப ராசியினர்களே உங்களுடைய ராசி நாதர் சுக்கிர பகவான் உச்சத்தில் இருப்பதால் நீங்கள் தொட்டது எல்லாம் வெற்றியை காணும் நேரமாக அமையும். உங்க ஜாதகத்தில் திசா புத்தி நடக்கும் நபர்களுக்கு இந்த மாசி மாதம் பொன்னான மாதமாக இருக்கும். சனி பகவான் தொழில் ஸ்தானத்திலும், புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலும், குரு பகவான் லாப ஸ்தானத்தின் அதிபதியாகவும் இருக்கிறார். 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மிதுனம்

மாபெரும் மாற்றங்களைப் பெறப்போகும் மிதுன ராசிக்காரர்களே, உங்களின் பூர்வ புண்ணிய அதிபதி சுக்கிரனும், குரு பகவானும், உங்களுடைய தொழில் ஸ்தான அதிபதியில் உள்ளனர். சத்ரு பகவானன, செவ்வாய் பகவான், மாசி மாதத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த மாதத்திற்குரிய முக்கிய பகவானன சூரிய பகவான், கும்ப ராசியில் பயணிக்கிறார். 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கடகம்

சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசியினரே! கடந்த மாதத்தில் உங்க ராசிக்கு 6ஆம் இடத்தில் இருந்த புதன் பகவானால் எடுக்கும் காரியங்களில் தடை, ஆரோக்கியத்தில் சிக்கல், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள். ஆனால், இந்த மாதத்தில் உங்க ராசிக்கு 7ஆம் இடமான கலஸ்தர ஸ்தானத்தில் தனித்து இருப்பதால், அற்புதமான காலக்கட்டமாக இருக்கும். 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

சிம்மம்

கடந்த மாதம் சூரிய பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்ததால் எல்லாமே தலைகீழாகத் தான் நடந்திருக்கும். வேலை இடத்தில் சிக்கல், தொழிலில் வீழ்ச்சி, குடும்பத்தில் சங்கடம் என்று நிம்மதியாக இருக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த மாசி மாதத்தில் ரிஷப ராசிக்கு சூரிய பகவான் களஸ்தர ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு எல்லா கிரக நிலைமையும் சிறப்பாக உள்ளது. அதிலும் குறிப்பாக, பணத்தை அள்ளித் தரும் சுக்கிர பகவான் இந்த மாசி மாதத்தில் சிறப்பாக இருக்கிறார். அதே போல, குரு பகவானும் ஆட்சி பெற்று நல்ல புண்ணிய ஸ்தலத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து, மீன ராசியில் பயணம் செய்வதால் நல்ல அருள் கிடைப்பதாக உள்ளது. 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

துலாம்

சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட துலாம் ராசியினரே! இந்த மாதம் 6 ஆம் இடத்தில் இருக்கும் உங்க ராசி அதிபதி உங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சிகரமான சூழல்கள் உருவாக்குவார். உத்தியோகத்தில் இத்தனை நாட்களாகபட்ட கஷ்டத்திற்கு உண்டான பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரியிடம் இருந்த சங்கடங்கள் விலகி, ஆதரவு பெருகும். 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் கடந்த மாத மிகவும் வகிரம்மான நிலையில் இருந்ததால் உங்களுக்கு எல்லாமே கஷ்டங்களை மட்டுமே தந்திருப்பார். ஒரு குழப்பம் நிறைந்த சூழ்நிலையில் இருந்திருப்பீர்கள். ஏதேனும் காரணத்திற்காக சற்று பதற்றத்துடன் இருந்திருக்கலாம். நீங்கள் செய்ய நினைக்கும் விஷயங்கள் நடக்காமல் போகலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு, வேலை இடத்தில் நிம்மதி இல்லாமல் என்று மாறி மாறி சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

தனுசு

கடந்த மாதம் வரையிலேயே தனுசு ராசியினருக்கு ஏழரை சனி இருந்த காரணத்தினால், அனைத்து காரியங்களும், இழுபறியையும், கஷ்டங்களையும் தருபவையாகவே அமைந்தது. இந்த மாசி மாதத்தை பொறுத்த வரை சனி பகவான் விலகி விட்டார். இதனால், இதுவரை இழுபறியான விஷயங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சி உண்டாகும். புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வாழ்வில் சிறந்த நிலையினை அடையக் கூடிய காலமாக அமையும். 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மகரம்

சனிபகவானை ராசி அதிபதியாக கொண்ட மகர ராசியினரே! ஜென்ம சனியால் கடந்த சில காலமாகவே படாதுபாடுபட்டிருப்பீர்கள். ஆனால், நடந்த முடிந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு ஜென்ம சனி முழுவதுமாக விலகி, நல்ல காலம் பிறந்துவிட்டது. இதனால், பணியிடத்தில் இருந்தவந்த சஞ்சலங்கள் அனைத்தும் விலகப் பெறுவீர்கள். தடைப்பட்டு நின்ற முக்கிய காரியங்கள் விரைவில் நடந்து முடியும். 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கும்பம்

கடந்த காலத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி, நீங்கள் நினைத்தது நிறைவேறப் போகும் நாளாக இருக்கும். பணியிடத்தில் நீங்க எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும். எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பார்க்கும் வேலையை விட்டு வேலை தேடும் நபர்களுக்கும் இது சிறப்பான மாதமாக அமைகிறது. வேலையைப் பொறுத்த வரை எந்த வித பாதிப்பும் இல்லை. 

மேலும் படிக்க

மாசி மாதத்தில் இந்த 5 ராசியினருக்கும் யோகம் தான்.. | Masi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மீனம்

மீன ராசிகர்களுக்கு ராசி நாதன் குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருப்பது சிறப்பான பலன்களை அளிக்கும். மாசி மாதமானது மீன ராசியினருக்கு வேலை குறித்த கவலை இல்லாமல் இருக்கும். அதாவது வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, போனஸ் உள்ளிட்ட வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும் மாதமாக அமையலாம்.

மேலும் படிக்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்