Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சொன்னதை செஞ்சு காட்டி கெத்து காட்டப்போகுகிறீர்கள் ஆனால் இதில் மட்டும் கவனம் | Meenam April Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
சொன்னதை செஞ்சு காட்டி கெத்து காட்டப்போகுகிறீர்கள் ஆனால் இதில் மட்டும் கவனம் | Meenam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் மீன ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

சொன்னதை செஞ்சு காட்டி கெத்து காட்டப்போகுகிறீர்கள் ஆனால் இதில் மட்டும் கவனம் | Meenam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

வேலை இன்னும் கிடைக்க வில்லையே என்று மன உளைச்சலில் இருந்தால் இனிமே அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில், தொழில், முதலீடு என்று அனைத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இருப்பினும் சனியின் பார்வை இருப்பதால் அதிக வேலை, மன அழுத்தம், அலைச்சல் ஆகியவை ஏற்படலாம். இப்படி இருந்தால் கவலைப் பட வேண்டாம், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் வரன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். காதலித்தவர்கள் பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் செய்யும் அம்சம் உள்ளது. ஆனால் இவை இரண்டிலும் பல சிக்கல்கள் வந்து போகும். எனவே, மனதை தளர விடாமல் முயற்சி செய்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.

சொன்னதை செஞ்சு காட்டி கெத்து காட்டப்போகுகிறீர்கள் ஆனால் இதில் மட்டும் கவனம் | Meenam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

சுப காரியங்களுக்கான மாதமாக அமையும். குழந்தை ஏக்கத்துடன் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண புழக்கம் அதிகமாக இருக்கும். படிப்பில் ஈடுபட்டவர்கள் நினைத்ததை செய்து காட்டுவீர்கள். இல்லத்தரசிகள் நிம்மதியாக மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சீற்றம் காண்பீர்கள். மீன ராசிக்காரர்களுக்கு எல்லா விஷயமும் தடங்களுடன் தான் வந்து சேறும். ஆனால் எல்லாம் நல்லதாகவே தான் நடக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்