பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் மேஷம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ராகு பகவான் சுய ஸ்தானத்தில் இருப்பதால் குழப்பம் நிறைந்த சூழல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். மன அழுத்தத்தால் உடல் ரீதியான நோய்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தில் நேர் வழியில் சஞ்சாரம் செய்வதால் தெளிவில்லாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மேலும் அவருடன் சந்திர பகவான் இருப்பதால் முன்கோபத்துடன் இருப்பீர்கள். அதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனை உண்டாகலாம்.
பொருளாதாரம் நெருக்கடி ஏற்படும். கேது பகவான் கலஸ்தரா ஸ்தானத்தில் இருப்பதால் கணவன் மனைவிக்குள் பாகுபாடு உணர்வு அதிகரிக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். செய்யாத தவறுக்கு நீங்கள் பழியேற்கும் சூழல் அமையலாம் என்பதால் கவனம் தேவை. தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களால் கவலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும் பிப்ரவரி மாதம் உங்களுக்கு சனி பகவானால் பலன்கள் கிடைக்கும் மாதமாக அமையும். பாக்கிய ஸ்தானத்தில் புதன் பகவான் சஞ்சாரம் செய்வதால் உங்கள் துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த மாதத்தில் மேஷ ராசிகாரர்களுக்கு சனி பகவான் மற்றும் குருவால் எல்லாம் நன்மையாக அமையும். சூரிய பகவான் 10 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு எந்த தீங்கும் நடக்க விடமாட்டார்.
பகைமையை வென்று வெற்றியை அடைவீர்கள். உங்களின் முயற்சிக்கான பலன் அமோகமாக இருக்கும். தொழில் வகையில் சிறிது ஏற்றம் இரக்கம் இருக்கும். குரு பகவான் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் உடன் பிறந்தவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கான செலவு உண்டாகும். எல்லா விஷயங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு 11 ஆம் வீட்டில் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது அமோகமான காலம். தங்களின் முழு முயற்சியை வெளிப்படுத்துபவர்களுக்கு சனி பகவான் நிச்சியம் உறு துணையாக இருப்பார். எனவே, இந்த காலங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சியை சரியாக செய்து முன்னேறுங்கள். காரியம் வெற்றி பெரும், புகழின் உச்சியை அடைவீர்கள். பிள்ளைகளால் நச்சரிப்பு ஏற்படும். உங்களுக்கு செலவு ஏற்படும் வகையில் நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
பரிகாரம்: சனி பகவானின் அருள் கிடைக்க இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி அல்லது உணவு வாங்கி கொடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…