Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image.

ஜோதிடத்தில், மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். இவர், ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் ஜனவரி 14, 2023 அன்று கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். இதை தான் "மகர சங்கராந்தி" என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, சூரிய பெயர்ச்சியில் சூரிய பகவான் சுப மற்றும் அசுப பலன்கள் இரண்டையும் மாறி மாறி வழங்குபவர். அந்தவகையில், இம்மாதம் கிரகங்களின் தலைவனாக இருக்கக்கூடிய சூரிய பகவான் தனது ராசியை மாற்றிக்கொள்வதால் 12 ராசிகளுக்கு உண்டான பலன்களை பார்க்கலாம். 

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

மேஷம்:

செல்வம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். ரொம்ப நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் விரைவில் ஈடேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமீப காலமாகவே இருந்த உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் விலகும். தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும்.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம்:

தொழிலில் இழுபறியாக இருந்த தனவரவு வந்துசேரும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் இருக்கும். இதனால், வியாபாரத்தில் லாபம் பெருகும். சிலருக்கு பணியிடத்தில் திடீரென வேலைப்பளு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவி இடையே பாசம் மிகுந்து காணப்படும். சிலருக்கு திருமண யோகமும் உண்டு. 

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம்:

உங்க ராசிக்கு 8ஆம் இடத்தில் சூரியன் பெயர்ச்சியாவதால், பாதகமான சூழ்நிலை வரலாம். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், கூர்மையான ஆயுதங்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கை வேண்டும். பணஇழப்பிற்கு வாய்ப்புள்ளதால் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

கடகம்:

சூரியன் மகர ராசியில் இருப்பதால், அதன் அம்சம் உங்க லக்னத்தில் இருக்கும். இதனால், உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். வாழ்க்கை துணையுடன் அடிக்கடி பிரச்சனை வரும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழிலில் யாருடைய ஆதரவும் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்படும்.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம்:

சிம்ம ராசிக்கு இந்த சூரிய பெயர்ச்சி பெரிய வெற்றிகளை கொண்டு சேர்க்கும். மந்தமாக இருந்த வியாபாரம் சூடுபிடிக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் அல்லது சம்பள உயர்வு ஏற்படும். குடும்பத்துடன் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அரசியல் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும்.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

கன்னி:

பங்குக் சந்தை சார்ந்த முதலீட்டில் லாபம் பெருகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி உண்டு. தந்தையுடன் இருந்த கருத்துவேறுபாடு விலகி ஒத்துழைப்பு அதிகரிக்கும். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரம் அற்புதமாக இருக்கும்.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

துலாம்:

சூரியனின் ராசி மாற்றத்தால் துலாம் ராசிக்கு யோகம் தான். தனவரவு தாராளமாக இருக்கும். இதனால், வங்கி சேமிப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த தனவரவு விரைவில் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு மாமியார் ஆதாரவு கிடைக்கும். சிலர் வாகனம், சொத்து வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம்:

நீங்க விரும்பாவிட்டாலும் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிக்கு நண்பர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். வேலை மாற்றம் செய்வதாக இருந்தால் இது நல்ல காலம். புதிய தொழில் தொடங்கவும் அற்புதமான காலம். இருப்பினும் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

தனுசு:

சூரியன் ராசி மாற்றத்தால் திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப சூழ்நிலைகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். சிலருக்கு சொத்து தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் எழலாம். எப்போதோ செய்த முதலீட்டு லாபம் கிடைக்கும். வாகன பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை. 

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

மகரம்:

நிறைய சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து மோதல்கள் தோன்றி மறையும். சிலருக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பண விஷயத்தில் மட்டும் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். பணியிடத்தில் திறமைகளை வெளிப்படுத்தி உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

கும்பம்:

சூரியன் உங்க ராசிக்கு 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், விலை உயர்ந்த பொருட்கள் திருட போக வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. பணியிடத்தில் பட்ட கஷ்டங்களுக்கு உண்டான பரிசு கிடைக்கும். இறக்குமதி, ஏற்றுமதி தொடர்புடையவர்கள் சின்ன சின்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மகர சங்கராந்திக்கு பிறகு இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | Magara Sankranti 2023 Rasi Palan in TamilRepresentative Image

மீனம்:

தொழிலில் எதிரிகள் விலகுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். மாணவர்களுக்கு அற்புதமான காலம். சிலருக்கு பொன், பொருள் வாங்கி மகிழ்வீர்கள். இருப்பினும், வார்த்தையில் கவனம் தேவை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்