Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கையில் நிறைய பணம் இருந்தாலும் இன்று இவருக்கு அவசரத்திற்கு எதுவும் இருக்காது.... ஆகஸ்ட் 10, ராசிபலன் 2022 !

Manoj Krishnamoorthi August 09, 2022 & 13:01 [IST]
Nalaya Rasi Palan: கையில் நிறைய பணம் இருந்தாலும் இன்று இவருக்கு அவசரத்திற்கு எதுவும் இருக்காது.... ஆகஸ்ட் 10, ராசிபலன் 2022 !Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 245 ஆம் நாள் புதன்கிழமை (10.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது.

நாளைய ராசிபலன் [11.08.2022, வியாழக்கிழமை]

நல்ல நேரம்

காலை:  9:15- 10:15 வரை

மாலை:  1:45- 2:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் திடமான திட்டத்தால் இன்று அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும், தொழிலில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் வேலையைத் திறம்பட செய்து வருமானத்தை உயர்த்தி கொள்வீர்கள். நிதி நிலையில் சுப செலவுகள் இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும், குடும்ப செலவு இருக்கும். கணவன் மனைவி உறவில் நல்ல உறவு இருக்கும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் பணிவான நடத்தை சுற்றத்தார் மத்தியில் இன்று நல்ல பெயரை உருவாக்கும், பொறுமையாக இருந்து தொழிலில் நல்ல பலன் அடைவீர்கள். பணியிடத்தில் வேலைகள் அதிகமாக இருக்கும், கலகலப்பு குறையும். நிதி நிலையில் செலவு தான் ஓங்கி உள்ளது.

குடும்பத்தில் கருத்து வேறுபாடு வாக்குவாதம் அளிக்கும், சுற்றத்தாரின் அறிவுரை நிலைமையை புரிய வைக்கும். காதல் வாழ்வில் அனுசரித்து செல்லுவீர்கள். வேலையின் பதட்டம் ஆரோக்கியத்தைக் கெடுக்க நேரிடும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள். உங்களின் முக்கியத்துவம் இன்று தொழிலில் அதிகமாக தேவைப்படும். வியாபாரம் சுமுகமாக இருக்கும், வருமானத்தை உயர்த்த பல சந்தர்ப்பங்கள் பிறக்கும். நிதிநிலை சிறப்பாக உள்ளது.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும், கணவன் மனைவி உறவில் புரிதல் இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக உள்ளது, புதியதாக காதலிப்பவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். உடல்நலம் நன்றாக உள்ளது. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

நீங்கள் எதிர்பாராத நேரத்தில் நம்பமுடியாத மனிதரிடமிருந்து வரும் உதவி தொழிலில் பலமாக அமையும். தொழிலில் வெற்றி பெற கடுமையாகப் போராட வேண்டும். உங்களின் இன்றைய நிலைக்கு பணம் கையில் பெரியளவு தங்காது, செலவுகள் அதிகமாக இருக்கும். செலவில் கவனம் காட்ட வேண்டும்.

வீட்டில் பொறுமை காக்க வேண்டிய நாளாகும், கணவன் மனைவி உறவில் மனவருத்தம் ஏற்படும். காதல் வாழ்வில் சில எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும்.   இன்று திருமணமாகாத கடக ராசிக்காரர்கள் காதல் வயப்படும் தருணமாக இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக மாறும் யோகம் உண்டு. புதுமையான நாளாக மாறும். மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது, உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள், பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

உங்கள் குடும்ப வாழ்வில் கவனம் காட்ட வேண்டும், வேலை சுமையால் குடும்பத்தில் நேரம் ஒதுக்க முடியாமல் போகும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல்நலத்தில் கால் வலி ஏற்படும். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

தொழில் காணும் வெற்றி உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும், மேலும் உங்கள் வருமானத்தை அதிகமாகும். இன்று கையில் போதுமான அளவு  பணம் இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். 

வீட்டில் பொழுது  இன்பமாக செல்லும், உறவினர் வருகை இருக்கும். நண்பர்களை சந்திப்பீர்கள்.  காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உருவாகும், எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது.  வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (10.08.2022, புதன்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்