Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைய தினம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் 3 ராசிக்காரர்கள் இவரா... ஆகஸ்ட் 10 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 09, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இன்றைய தினம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் 3 ராசிக்காரர்கள் இவரா... ஆகஸ்ட் 10 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 25 ஆம் நாள் புதன்கிழமை (10.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளத.

நாளைய ராசிபலன் [11.08.2022, வியாழக்கிழமை]

நல்ல நேரம்

காலை:  9:15- 10:15 வரை

மாலை:  1:45- 2:45 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (10.08.2022, புதன்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்கள் மனம் எதிர்பார்க்கும் நிம்மதியான நாளாக இன்று இருக்கும், தொழிலில் பெரியதாக வேலை இருக்காது. மேலும் இன்று  நீங்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் நேரம் செலுத்துவீர்கள். அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக இருக்கும், சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

குடும்பத்தில் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள். பெற்றோரின் மனதை ஆனந்தமாக்குவீர்கள்.  கணவன் மனைவி உரவு நலமாக இருக்கும். நண்பர்களுடன் ஆனந்தமாக பொழுது செல்லும். ஆரோக்கியத்தில் நன்றாக இருக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் தொழிலில் இருக்கும் வளர்ச்சி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், பணியில் வரும் சங்கடங்களை எளிமையாக கடந்து விடுவீர்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும், பெரியளவு லாபம் இல்லாவிட்டாலும் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும். 

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். பெற்றோரிடம் பேசும் முன் சிந்தித்து உரையாட வேண்டும். காதல் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்றுப் புதுமையான சிந்தனைகள் பல தோன்றும், புதிய ஐடியாவால் தொழிலில் சில மாற்றங்கள் நிகழும்.  வியாபாரத்தில் பொறுமையாக இருப்பதால் ஆதாயம் கிடைக்கும். பண வரவு எதிர்பார்த்த அலவு இருக்காது, பிறரிடம் பண உதவி எதிர்பார்ப்பீர்கள். 

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். இன்று தனிமையில் நேரம் செலுத்த நினைப்பீர்கள். நண்பர்களிடம் உதவி கேட்கும் நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும், முக்கியமாக குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

கலகலப்பான குணத்துக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்றைய தினம் கேளிக்கையாக இருந்தாலும் தொழில் சற்று கவனம் காட்ட வேண்டும். பணியில் சில முக்கியமானவற்றை மறக்கும் நிலை ஏற்படும். வியாபாரத்தில் கவனக் குறை பண விரையத்தை உருவாக்கும். செலவுகள் வரவை விட அதிகமாக இருக்கும்.

 

குடும்பத்தில் நிம்மதி இருக்கும். காதல் வாழ்க்கையில் விரிசல் வரும், உங்கள் பேச்சால் மனதைக் காயப்படுத்துவீர்கள். உடல்நலத்தில் ஓய்வு குறை சிறிய சோர்வு அளிக்கும். கவனம்!   

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  2

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கும் நாளாக இருக்கும், தொழிலில் ஓரளவு வளர்ச்சி இருக்கும். உங்களின் உற்சாகமான மனநிலை ஆர்வத்துடன் உழைக்கும். வியாபாரத்தில் தன்னம்பிக்கையுடன் சில புதிய காரியங்கள் செய்வீர்கள். செல்வ நிலை சிறப்பாக உள்ளது.

வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும், உறவினர் வருகைக்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். சுற்றத்தார் மூலம் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்படுவர். உடல்நலம் நன்றாக உள்ளது.  பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று திறமையான நடவடிக்கையால் தொழிலில் நல்ல பெயரை உருவாக்கிவிடுவீர்கள். முக்கியமாக வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கை கிடைக்கும். ஓரளவு கையில் பணப் புழக்கம் இருக்கும். தேவையற்ற செலவுகள் சேமிப்பைக் குறைக்கும்.

குடும்ப வாழ்க்கை உற்சாகமாக இருக்காது, செலவு மன வருத்தம் அளிக்கும். கணவன் மனைவி உறவில் சிறிய ஊடல் வரும். காதல் வாழ்வில் அமைதி காப்பது நன்மை ஆகும். தூக்கமின்மை பிரச்சனை இருக்கும்.  திறமை!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்