Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,304.88
-790.34sensex(-1.08%)
நிஃப்டி21,951.15
-247.20sensex(-1.11%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று பலவித நற்பலனைக் கவரப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர் இவரா... ஜூலை13, 2022!

Manoj Krishnamoorthi July 12, 2022 & 13:45 [IST]
Nalaya Rasi Palan: இன்று பலவித நற்பலனைக் கவரப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர் இவரா... ஜூலை13, 2022!Representative Image.

Nalaya Rasipalan (13.07.2022)

27 நட்சத்திர தினசரி பலன் (13.07.2022) 

நல்ல நேரம்

காலை: 9:45- 10:30 வரை

மாலை: 4:45- 5:45 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

மேஷ ராசிக்காரரே இதுவரை இருந்த சிறிய பிரச்சனைகள் அகன்று இன்றைய தினத்தில் சற்று நிம்மதியாக இருக்க முடியும், வேலைச் சுமை அதிகமாக இருக்கும்.  வருமானம் ஓரளவு நன்றாக இருக்கும், செலவு செய்யும் யோசிப்பது உங்கள் நிதி நிலைமைக்கு  நல்லதாகும்.   

திருமணம் கைகூடும். காதல் கைகூடும், தெய்வ நம்பிக்கை நன்மை பகுக்கும். ஆரோக்கியத்தில் சீறிய பிரச்சனைகள் இருக்கும், உணவு பழக்கத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் முடிவுகளைப் பின்பற்றாமல் சிந்தித்து செயல்படும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்கள் அன்பான இதயத்தால் அனைவரையும் நிம்மதியான வைக்கும் தன்மை கொண்ட உங்களுக்கு  இன்று உடல்நலத்தில் கவனம் தேவை, வெளியே செல்லும்போது கவனமாக இருங்கள் சில சங்கடங்களில் சிக்கிக் கொள்ளுவீர்கள். உங்களின் நட்பு வட்டாரம் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் உடன் வேலை செய்வோர் மூலம் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் பொறுமை இழப்பதால் சக பணியாளரின் மனதைக் காயப்படுத்துவீர். செலவுகள் அதிகமாக இருக்கும், சிலருக்கு மருத்துவ செலவு வரும். வீட்டில் வாக்குவாதம் செய்யாதீர். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது, திருமணத்தில் முடியும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

மிதுன இராசிக்காரரே இதுவரை நீங்கள் எதிர்பார்த்த ஓய்வு இன்று கிடைக்கும், உங்கள் உழைப்பு இன்று பாராட்டு பெறும். பணியிடத்தில் இன்று சுமுகமான நிலையே உண்டு, வேலைகள் பெரியதாக இருக்காது. நிதி நிலையில் இன்று அதிர்ஷ்டமான நாளாகும், கணமான பண வரவு உண்டு. 

திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது, வீட்டில் இன்று நிம்மதியாக உணருவீர்கள். பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்துவீர்கள்.  நண்பர்களுடன் பேச முடியும். கல்வி நிலை மிகவும் அருமையாக உள்ளது. உடல்நலத்தில் குறையில்லை, உடலுக்கு தேவைப்படும் ஓய்வு கிடைக்கும். ஓய்வு! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்கள் கலகலப்பான மனதுக்கு  இன்று கிரக நிலை சுமாராக தான் உள்ளது, எனவே மனதில் ஒரு பதட்டம் இருக்கும். இன்று புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம், நீங்கள் செய்யும் காரியத்தைத் தீவரமாக மிகவும் கவனமாக செய்தால் வெற்றி நிச்சயம். செல்வ நிலை லாபகரமாக உள்ளது.

வீட்டில் அமைதியான சூழல் இருந்தாலும் நீங்கள் மன வருத்தத்துடனே இருப்பீர்கள். இன்று உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.  தெய்வீக சிந்தனை மட்டும் தேவை. குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்று உங்கள் மனதில் இருக்கும் அதிகமான துணிச்சல் அயராது உழைக்க தூண்டும், தொழில் ஸ்தானத்தில் அமோகமான வளர்ச்சி இருக்கும். இன்று வருமானம் திடீரென உயரும்.  உத்தியோகத்தில் கூடுதல் வேலைச் சுமை இருப்பதாக உணருவீர்கள். 

வீட்டில் இன்று சகஜமான நிலைதான் உள்ளது, நண்பர்களுடன் இருக்கும்போது உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும்  கவனமாக இருத்தல் உடல்நலத்தை மேம்படுத்தும்.  துணிவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்கள் விளையாட்டு சுபாவத்தை விடுத்து இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகும், முக்கியமாகத் தொழிலில் இன்று எடுக்கும் முடிவு எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வேலைச் சுமை அதிகமாக இருக்கும். செல்வ நிலையில் கவனமாக இருங்கள், பணம் எப்படி செலவானது என்ற ஒரு நிலை இருக்கும்.

 குடும்ப வழ்வு நன்றாக உள்ளது, குடும்பத்தினரின் உதவி சில சிக்கலைச் சரிசெய்யும்.  தொழிலில் சற்று வருத்தம் ஏற்படும். திருமண வாழ்வில் பிரச்சனை இல்லை. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5


Part 2 :துலாம்- மீனம் தினசரி ராசிபலன் (13.07.2022), புதன்கிழமை


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்