Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிகளுக்கு இன்னிக்கு நிலை தடுமாறும் அளவு பண வரவு இருக்கும்…. ஜூலை 9, 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi July 08, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இந்த 3 ராசிகளுக்கு இன்னிக்கு நிலை தடுமாறும் அளவு பண வரவு இருக்கும்…. ஜூலை 9, 2022 ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நாளைய ராசிபலன் (10:07:2022)

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 மணி

மாலை: 4:45- 5:45 மணி 

Nalaya Rasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

எப்போதும் தன்னம்பிக்கை தவறாது இருக்கும் உங்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், இன்று தொழிலில் திருப்திகரமான மனநிலை இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளருடன் இனிமையாகப் பொழுது செல்லும்,  உங்கள் குடும்ப வாழ்க்கையில் அன்புதான் இருக்கும், உங்கள் அன்பால் குடும்பத்தினர் திக்குமுக்காடி போவர். அருமையான செல்வ வரவு இன்று இருக்கும்.  உங்கள் தேவைகளை சரிசெய்யக் கையில் போதுமான பணம் இருக்கும். மனதில் இருக்கும் உற்சாகம் ஆரோக்கியமாக இருக்கத் தூண்டும். ஆனந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்றைய தினம் முன்பு எடுத்த தெளிவான முடிவின் பலனாக அமையும்,  பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தை உணர்வீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்கும். வீட்டில் உங்களின் மதிப்பு கூடும். நல்ல பண வரவு இருக்கும், மனதில் அவ்வப்போது சில எதிர்மறை எண்ணங்கள் தோன்றும், சில சமயம் மனதைக் குழப்பமாக்கும். உடல்நலத்திற்கு பிரச்சனை இல்லை. கல்வியில் கவன சிதறல் ஏற்படும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்களுக்கு நடக்கும் சில எதிர்பாராத நன்மைகள் உங்களை வியப்பில் ஆழ்த்தும், எந்தவொரு முக்கிய முடிவையும் ஆலோசிக்காமல் எடுக்காதீர். உங்கள் குழப்பமான மனது  வீட்டில் இருக்கும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும். தொழிலில் புதிய முயற்சி எடுக்காமல் இருப்பதே சிறந்தாகும். பணம் இன்று அதிகமாக செலவாகும், முக்கியமான பொருளை இழக்கும் சூழல் வரும். ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது, நல்ல ஓய்வு தேவைப்படும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்று வழக்கமான வேலையிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மனம் அமைதி பெறும், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தொழிலில் திட்டமிட்டு செயல்படுங்கள் இல்லையென்றால்  சில தடுமாற்றங்கள் உருவாகும். அலுவலகத்தில் அதீத வேலைச் சுமை மன வருத்தத்தை அளிக்கும். தொழிலில் தடுமாற்றம் இருந்தாலும் பண வரவு இருக்கும், செல்வ நிலையில்  பெரியதாகப் பாதிப்பு இருக்காது. ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். திட்டம்!   

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope)

பிறரின் கஷ்டத்தைப் பார்த்தால் உதவி செய்யத் துடிக்கும் உங்களுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும், விடாமுயற்சியால் வெற்றியை அடைந்துவிடுவீர்கள்.  பணியில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் இன்று பணியின் காரணமாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கும், இருப்பினும் கொடுத்த வேலையைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் சிறிய கவலையைத் தரும். இன்று இருக்கும் கணிசமான பண வரவு, குடும்ப வாழ்க்கையில் பல ஆனந்தமான தருணத்தை உருவாக்கும். நல்ல ஆரோக்கியம் இருக்கும். கல்வியில் மாணவர்கள் இன்று முன்னிலையில் வகுக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்கள் மனம் விரும்புவதை அடையப் பல புடிய முயற்சிகள் எடுப்பீர்கள், வெற்றி பெறுவோமா என்ற எண்ணம் மனதில் பதட்டத்தை அளிக்கும். தொழிலில் சிறிய தடங்கள் உருவாகும், பதற்றமடையாமல் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் உங்கள் செயலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கல்வியில் இன்று ஆர்வத்துடன்  படிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் அதிகமாகப் பேசாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். முக்கியமாகப் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலை மிகவும் நன்றாக உள்ளது, சுப செலவுகள் இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏதுமில்லை என்றாலும் தலைவலி போன்ற பிரச்சனை வரும். ஆர்வம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9


Part 2: துலாம்- மீனம் தினசரி ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்