Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்றைய அதிர்ஷ்டகார ராசியாளர் நீங்களானு பார்க்கலாம் வாங்க.. ஜூலை 10, 2022  ராசிபலன்..! 

Manoj Krishnamoorthi July 09, 2022 & 12:45 [IST]
Nalaya Rasipalan: இன்றைய அதிர்ஷ்டகார ராசியாளர் நீங்களானு பார்க்கலாம் வாங்க.. ஜூலை 10, 2022  ராசிபலன்..! Representative Image.

Free Tamil Horoscope Full Predictions                                    

நேற்றைய ராசிபலன் (9:07:2022)                 

வார ராசிபலன் (10:07:2022-  16:07:2022)      

நாளைய ராசிபலன் (11:07:2022)

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்றைய தினம் நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்காது, பதட்டமான சூழலே நிலவும். வருமானம் நிலையாக இருந்தாலும் வேலையிடத்தில் திருப்திகரமான சூழல் இருக்காது, வியாபாரம் செய்பவருக்கு இன்று வரவைக் காட்டிலும்  அதிக செலவுகள் இருக்கும். 

பெற்றோர் மீது மனஸ்தாபம் ஏற்படும். திருமண பந்தத்தில் இன்று மகிழ்ச்சி பெரியளவு இருக்காது, காதலில் பிரச்சனை வர  வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே யாரிடமும் அதிகமாக பேச்சு வார்த்தை வைத்து கொள்ளாதீர்கள். உடல்நலக் கோளாறு இருக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  2

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

சுற்றத்தாரை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைக்கும் உங்களுக்கு மற்றவர்களால் இன்று பல எதிர்பாராத நன்மைகள் நிகழும். தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும், புதிய முயற்சி பல எடுக்க நிலைப்பீர்கள்.  உங்களின் மதிப்பு தொழிலில் இன்று சிறப்பாக அமையும். கல்வி நிலையில் ஆசைப்படும் அங்கிகாரம் கிடைக்கும். 

வீட்டில் அனைவரிடமும் நேரம் ஒதுக்க முடியும், உங்கள் நகைச்சுவை  உணர்வு குடும்பத்தினரை ஆனந்தமாக்கும். பண வரவு அதிகமாகும், செலவுகள் குறையும். காதல் வாழ்க்கை செழிக்கும். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. திடீர் கோபம் வரும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்களின் மனம் நிறைவாக இருக்கும் நாளாக இன்றைய தினம் அமையும், பிறர் வேதனைகளைத் தீர்க்க அயராது போராடும்  உங்களுக்கு இன்று  குடும்ப வாழ்க்கை  மகிழ்ச்சியாக இருக்கும், திடீர் கிடைக்கும் பண வரவு செலவைச் சமாளிக்கும். 

தொழிலில் சில பணிகளை நுணக்கமாகச் செய்ய வேண்டும், வாடிக்கையாளரின் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

கடகம் (Cancer 2022 Horoscope)

உழைக்கும்போது பிற விஷயத்தில் கவனம் செலுத்தாத உங்களுக்கு இன்றைய தினம் வழக்கமான நாளாக இல்லாமல் சற்று ஓய்வு தினமாக அமையும். தொழிலில் நடக்க வேண்டிய வேலை மும்மரமாக நடக்கும், கல்வி ஸ்தானம் இயல்பாக உள்ளது.

வீட்டில் பொறுமையாக இருப்பது இன்றைய தினத்தை மேலும் ஆனந்தமாக்கும், செல்வ நிலையில் இன்று வரவு கொஞ்சம் இருக்கும் கொடுத்த கடன் திரும்ப வரும், அதனால் மனதில் ஒரு மகிழ்ச்சி  நிறையும். குடும்ப செலவு இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்காது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 4 

சிம்மம் (Leo 2022 Horoscope)

எந்த சூழ்நிலையிலும் தைரியத்தைக் கைவிடாத உங்களுக்கு இன்று மனமும் உடலும் சற்று சுறுசுறுப்பு குறைந்து இருக்கும். ஓய்வு எடுக்க நினைப்பீர்கள். தொழிலில் கவனம் செலுத்த முடியாது, பிறரின் உதவி இன்று உங்கள் வேலையை செய்ய தேவைப்படும்.  நிதி ஸ்தானத்தில் சற்று செலவு அதிகமாக இருக்கும்.

வீட்டில் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருங்கள்,  வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்க இறை பிரார்த்தனையில் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களின் அமைதி கெடும் சூழல் உண்டாகும். சரியான  ஓய்வு கிடைக்காததால்  சோர்வாக இருப்பீர்கள், உடல்நலத்தில் கவனமாக இருங்கள். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:  7

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்று உங்களின் வழக்கமான வேலையை விரைவாக செய்வீர்கள், மனதை அமைதியாக வைக்கத் தனிமையில் இருக்க விரும்புவீர்கள். தொழிலில் பாராட்டு கிடைக்கும், எதிர்பாராத இடங்களிலிருந்து செல்வம் வரும் . செல்வ வரவு உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும். வருங்கால முதலீட்டுக்கு சேமிப்பீர்கள்.

குடும்பத்தில் இன்று அன்பாக நடந்து கொள்வீர்கள், திருமண வாழ்வில் சற்று சகஜமான வாழ்க்கை இருக்கும்.  உடல்நலம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் தேவை. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3  


Part 2:துலாம்- மீனம் அடுத்த 6 ராசிபலன் அறிய இளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்