Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: செலவை குறைத்தால் நிம்மதி... 14.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 13, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: செலவை குறைத்தால் நிம்மதி... 14.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 20 ஆம் நாள் புதன்கிழமை (14.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நாளைய ராசிபலன் (15.09.2022, வியாழக்கிழமை)

நல்ல நேரம்

காலை: 09:15- 0:15 வரை

மாலை: 06:30- 07:30 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan) 

இன்றைய தினம்  நிதி நிலைமையில் லாபகரமான நாளாகும், செல்வத்தைச் சரியாக திட்டமிட்டுப் பாதுகாக்க வேண்டும்.  நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும் நிலையிலிருப்பதால் மனம் உற்சாகமாக இருக்கும். அலுவலகத்தில் சுமுகமான தருணம் இருக்கும். 

மண வாழ்க்கையில் நல்ல அன்யோன்யம் இருக்கும், காதல் வாழ்க்கையில் வெளிப்படையான பேச்சு நெருக்கத்தை உருவாக்கும். மாணவர்கள் கல்வி பாதிப்பு இல்லை, சுமுகமாக இருக்கும்.  தேவையில்லாத மன அழுத்தம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் வேலை சுமாராகத் தான் நடக்கும் மனம் ஆசுவாசமாக இருக்கும், இலக்கை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயல்படுவது அலுவலகத்தில் வேலை அழுத்தம் குறைக்கும்.   

இன்று செலவு அதிகமாக இருந்தாலும் செல்வ நிலை அமோகமாகத் தான் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சிறிய குழப்பமான சூழல் நிலவும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது. உடலில் சிறுசிறு வலிகள் இருக்கும். போட்டி! 

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

தொழிலில் உங்கள் திறமையால் நல்ல வளர்ச்சியை உருவாக்குவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது வியாபாரத்தில் நல்ல பலன் அளிக்கும். செல்வ நிலை சீராக இருப்பதால்  உங்கள் பணத்தை லாபம் தரும் இடத்தில் சேமிப்பது பலன் தரும். 

 

குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள், குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும். மாணவர்கள் வருங்காலத்தைப் பற்றி தெளிவான முடிவுகளை எடுப்பர். உடல்நலம் நன்றாக இருந்தாலும் கவனமாக இருப்பது தவறு இல்லை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாகும், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் பல புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றம் அளிக்கும். பண பரிவர்த்தனை நன்றாக இருக்கும். செல்வத்தை சேமிக்க முடியும். 

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினருடன் இன்பமாக பொழுதை கழிப்பீர். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். கலைப்பாதையில் விருப்பம் கொண்ட  உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் அமைதியான மனநிலை இருக்கும். அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாகும். கையில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.  

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், வாரிசுகளின் மூலம் சந்தோஷமான சூழல் உருவாகும். இரத்த சொந்தத்தின் மூலம் உதவி கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நிதானமாக இருக்க வேண்டும், தொழில் ஏற்ற இறக்கமாக இருக்கும். வேலையில் அதிக பணிகள் முடிக்க முடியாமல் போகும். உங்கள் நிதி நிலையில் சிக்கல்கள் உருவாகும். செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 

குடும்பத்தில் சிறிய மனக்கசப்புகள் உருவாகும். காதலில் தேவையற்ற கோபத்தால் பிரச்சனைகள் அதிகமாகும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டத் தொடங்குவர். ஆரோக்கியத்தில் குறைபாடு இல்லை.தடை! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (14.09.2022, புதன்கிழமை)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்