Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: மற்றவர்கள் இன்பத்தில் தத்தளிக்கும் வேலையில் இவருக்கு மட்டும்... 9.9.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 08, 2022 & 12:50 [IST]
Nalaya Rasi Palan: மற்றவர்கள் இன்பத்தில் தத்தளிக்கும் வேலையில் இவருக்கு மட்டும்... 9.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (9.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நாளைய ராசிபலன் (10.09.2022, சனிக்கிழமை)

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

வழக்கத்தை விட மனம் புத்துணர்ச்சியாக இருக்கும், வேலைகள் சிறப்பாக நடக்கும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டியதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். 

காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து நடப்பீர். திருமண பந்தத்தில் அன்பு அதிகரிக்கும். நிம்மதியான மனநிலை இருக்கும், ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மனதில் ஒரு நிம்மதி இருக்கும். அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்ற முடியும். அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை நல்ல பலன் அளிக்கும். நிதியில் முன்னேற்றம் ஏற்படும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்பாக இருக்கும், நட்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பீர். உடல்நலம் சிறப்பாக இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று பொறுமையாக இருக்க வேண்டும், உங்களுக்கு சில இடையூறு வரலாம். வேலை அழுத்தம் உடல் சோர்வை அளிக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பணத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும். 

வீட்டில் உணர்ச்சிவசப்படுவதால் வீட்டில் அமைதி குறையும், அமைதியாக இருப்பது நல்லது.  கால் சார்ந்த வலிகள் இருக்கும், ஓய்வு தேவைப்படும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று புதிய முயற்சிகள் செய்வதாக இருந்தால் ஆராய்ந்து செய்வது நல்லது, உங்கள் வேலையில் தவறு ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவன சிதறல் ஏற்படலாம். போதிய அளவு பணம் கையில் இருக்கும். 

இல்லற வாழ்வு சகஜமாக செல்லும். காதல் வாழ்வில் பேச்சின் மூலம் சிறிய குழப்பம் பிறக்கும். குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறதி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் முயற்சியில் இன்று சிறிய தடங்கல் ஏற்படலாம், மேலதிகாரியுடன் நல்ல உறவு இருக்கும். பணிகள் இலக்கை முடிக்க சரியான திட்டம் தேவைப்படும். பணம் அதிகமாக செலவாகும்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், குடும்பத்தினர் மூலம் ஆதாயம் உண்டு, காதல் வாழ்வு சகஜமாக நகரும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 

தடங்கல்! 

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் இருக்கும் வளர்ச்சி உங்களுக்கு இன்பமான நாளாக மாற்றும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு உள்ளது. பணம் வரவு உண்டு.

காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும், நேர்மையான அணுகுமுறை புரிதல் அளிக்கும். குடும்பத்துடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க நினைப்பீர். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (9.09.2022, வெள்ளிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்