Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்று இந்த ராசிக்காரர் வெளிய சென்றால் அவ்வளவு தான்…. ஜூலை 11, 2022 ராசிபலன்

Manoj Krishnamoorthi July 09, 2022 & 16:00 [IST]
Nalaya Rasipalan: இன்று இந்த ராசிக்காரர் வெளிய சென்றால் அவ்வளவு தான்…. ஜூலை 11, 2022 ராசிபலன்Representative Image.

Free Tamil Horoscope Full Predictions     

வார ராசிபலன்      

நாளைய ராசிபலன் ( 12:07:2022)      

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 04:45-  05:45 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

அமைதியாக இருந்தால் இன்று எந்தவொரு பிரச்சனையிலும் சிக்காமல் இன்றைய தினத்தை நிம்மதியாகக் கடத்த முடியும், வெளியில் செல்லும்போது இன்று வீண் வாக்குவாதம் உருவாகும், அதனை பெரியதாக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது மனநிலையைக் கெடுக்காது.  கோபத்தைத் தவிர்ப்பதால் இன்று பல நன்மைகள் பெற முடியும். 

குடும்பத்தில் அனைவருடனும் வழக்கம்போல் நடந்து கொள்வீர்கள்.  செல்வ நிலையில் இன்று பெரியதாக பாதிப்பு இல்லை, ஆன்மீக எண்ணம் இன்று அதிகமாக இருக்கும். சரியான  ஓய்வு கிடைக்காததால்  சோர்வாக இருப்பீர்கள், உடல்நலத்தில் கவனமாக இருங்கள். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்:  5

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்று வருங்காலத்தைப் பற்றிய அச்சம் மனதில் அதிகமாக இருக்கும், அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற யோசனை மனதிலிருந்து கொண்டே இருக்கும். 

வீட்டில் அமைதியான சூழல் இருக்கும், செலவுகள் வழக்கைத்தை விட அதிகமாக இருந்தாலும் அதை சமாளிக்கும் அளவு  நிதி நிலை சிறப்பாக இருக்கும். நண்பர்களால் மனம் ஆனந்தமாகும். மனம் இன்று நிம்மதியாக இருக்க உங்கள் நண்பர்கள் ஒரு முக்கியமான காரணமாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் உழைப்பு தக்க சன்மானம் கிடைக்கும், தொழிலில் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள்  நீங்கும். உடல் சோர்வாக இருப்பதால் இன்று நீங்கள் செய்யும் காரியத்தில் சிறிய தாமதம் உருவாகும், சரியான திட்டமிடல் வேண்டும். 

வீட்டில் பொறுமையாக இருப்பது அன்பை அதிகப்படுத்தும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகமாகும். இன்று செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், எதிர்கால தேவைக்காகச் செலவு செய்வதால் மன வருத்தம் அளிக்காது. தொழிலில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும், உங்கள் பணியைக் கண்டு புகழாரம் சூட்டுவர். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்கள் அன்பு வளையில் அனைவரையும் எளிதில் விழவைக்கும் உங்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியாக அமையும், மனதில் ரணமாக இருந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் ஸ்தானம் வளர்ச்சி கொள்ளும், புதிய மனிதர்களின் உதவியால் தொழிலை வேறு தளத்துக்கு அழைத்து செல்லுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும், பண வரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். 

உங்கள் மண  வாழ்க்கையில் துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள், வாழ்க்கை துணையின் கணிசமான நடத்தை உங்களுக்கு உதவியாக இருக்கும். போட்டி தேர்வு எழுதும் கடக ராசிக்காரர் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும், மனம் நிம்மதியாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை. வளர்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்று நீங்கள்  செய்யும் காரியத்திற்கான வெகுமதி உங்களைத் தேடி வரும், அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் விடாமுயற்சியால் வெற்றி கண்டு சக பணியாளரை வியப்பில் தள்ளுவீர்கள். எதிர்பாராத சம்பவங்கள் மனதை ஆனந்தமாக்கும்.

காதல் விவகாரம் நிச்சயம் பாசிடிவான ரிசல்டைத் தரும். வீட்டில் உள்ளவர்கள் உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்வார்கள். உங்கள் நிதி நிலை இன்று அனைவருக்கும் உதவும் வகையில் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். அங்கீகாரம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்களின் நடத்தை இன்று சமூகத்தில் உங்களை பெருமைப்படுத்தும், இன்றைய தினம் தொழிலில் எடுக்கும் புதிய முயற்சி நல்ல பலன் அளிக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தாலும் பெரிதளவு லாபம் இருக்காது.  சில பணக் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கையைத் தளரவிடாமல் உழைத்து அதை சமாளிக்கும் வழி கண்டறிவீர்கள். 

குடும்ப வாழ்க்கையில் இன்று ஒற்றுமை அதிகரிக்கும், காதல் வாழ்க்கையில் இன்று நட்பான உறவு முறையில் நடந்து கொள்ளுவீர்கள். உடல் நலம் நன்றாக இருந்தாலும் சற்று சோர்வாக உணர்வீர்கள். மாணவர்கள் இன்று செய்யும் சாதனையால் அனைவரின் மத்தியில் பாராட்டப்படுவர். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 1


Part 2: துலாம்- மீனம் வரை அடுத்த 6 ராசியின் ராசிபலன் அறிய க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்