Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: சந்திரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர் வாழ்க்கை உச்சம் தான்…. ஜூலை 11, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 10, 2022 & 17:15 [IST]
Nalaya Rasipalan: சந்திரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர் வாழ்க்கை உச்சம் தான்…. ஜூலை 11, 2022 ராசிபலன்!Representative Image.

Free Tamil Horoscope Full Predictions     

வார ராசிபலன் 

நாளைய ராசிபலன் ( 12:07:2022)      

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 04:45-  05:45 வரை

Nalaya Rasipalan


Part 1: மேஷம்  - கன்னி வரை முதல் 6 ராசியின் 11.07.2022 ராசிபலன் அறிய க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் மனம் எதிர்பார்த்த உயரத்தை அடைந்தது போன்று ஒரு எண்ணம் மனதில் தோன்றும், அந்த எண்ணம் வழக்கமான வேலைகளை விரைவாக முடித்துவிடுவதால் ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும். சமுக பணியின் மீது ஆர்வம் வரும். நிதி நிலையில் இன்று நல்ல லாபம் காண முடியும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

வீட்டில் இன்று நிம்மதியான சூழல் அதிகமாகும், வெளிப்படையாகப் பேசி இன்று பலரின் நட்பை பெறுவீர்கள். காதல் விவகாரம் சுமாராக உள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறப்பான நாளாகும்.  உடல் நலத்தில் கவனம் தேவை. லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று தொழிலில் கிடைக்கும் அமோக வளர்ச்சி  எதிர்பாராத லாபத்தை அளிக்கும். வெகுமதி கிடைக்கும். மேலும் செலவு குறைவதால் இன்று பணம் கொஞ்சம் சேமிக்க முடியும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும்.  அலுவலகத்தில் கடினமான வேலைகளை நீங்கள் விரைவாக முடித்து சாதனைப் படைப்பீர்கள். மனம் அமைதியான சூழலை விரும்பும், பயணத்தில் அமைதி காண முயலுவீர்கள். 

குடும்ப வாழ்க்கையில் சகஜமாகப் பழகுவீர்கள், உங்கள் நகைச்சுவையான பேச்சு நட்பு வட்டாரத்தில் வேடிக்கையான தருணத்தை உருவாக்கி மகிழ்ச்சியாக வைக்கும். புதிய தொழில் சிந்தனைகள் கைகூடும், ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. தியானம் செய்வதால் மனம் பெறுவீர்கள். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு சரியான திட்டமிடல்  மிகமிக அவசியமாகும், முக்கியமாக அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் கொடுத்த பணியைக் குறித்த நேரத்தில் முடிக்கலாம். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபம் காண்பது மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். இன்று சுப விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள், மனம் நிம்மதி அடையும். 

குடும்பத்தினரின் ஆதரவு இன்று அதிகமாக தேவைப்படும், செலவுகள் இயல்பை விடச் சற்று அதிகமாக  இருப்பதால்  கையில் பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக  இருப்பதாக உணரப்படுவீர்கள். மண வாழ்க்கையில் நல்ல உறவு இருக்கும். மாணவர்கள் நேரத்தை விரயமாகக் கூடும். ஆரோக்கியத்தில் தூக்கமின்மையால் சில தொல்லைகள் தோன்றும்.  கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்கள் முழுமனதுடன்  பணிகளை செய்வதால் இன்று தொழிலில் அமோக வளர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் இன்று தன லாபம் அதிகமாகும். பிறருக்கு உதவி செய்வதால் உங்கள் மனம் ஆறுதல் அடையும். திருமணத் தடை நீங்கும். 

காதல் விவகாரத்தில் பிரச்சனை வரும் அதனால் திடீர் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் வரலாம். அலுவலகத்தில் போட்டி உருவாகும். செல்வ நிலையில் பாதிப்பில்லை, எதிர்பார்த்த நேரத்தில் பண உதவிக் கிடைக்கும். உடல் நலம் நன்றாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் (Aquarius 2022 Horoscope)

கும்ப ராசிக்காரரே இதுவரை உங்கள் மனம் எதிர்பார்த்த ஆர்வம் இன்று பிறக்கும், லட்சியத்தை நனவாக்க அயராது போராடுவீர்கள். தொழில் ஸ்தானம் இயல்பான நிலையில் இருக்கும். பல உழைப்புக்கு பரிசாக இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று செல்வ நிலையில் சரியாக இல்லை, எதிர்காலத்திற்காக  முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். 

திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். அமைதியைக்  கடைப்பிடிக்க வேண்டும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும், அதனால் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.  ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

தெளிவான மனநிலையால் உடலும் மனமும் ஒருநிலையில் அமைத்து புதிய சிந்தனைகளை முயற்சிக்கும் உங்களுக்கு இன்று நன்மைகள் கிடைக்கும், மனதில் இருக்கும் தெளிவான சிந்தனைகளின் மூலம் உங்களுக்கு தொழிலில் வரும் பிரச்சனையைச் சமாளிக்க முடியும். இன்று உங்கள் இலக்கை நெருங்குவீர்கள், சாதித்தாக உணருவீர்கள்.  பெரிய பண வரவு இருக்காது, என்ற போதிலும் நிதி நெருக்கடி இருக்காது. 

குடும்ப வாழ்வு சிறப்பாக உள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து பல பொதுச்சேவைகள் செய்வீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.  கல்வி நிலை அமோகமாக உள்ளது. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்ட வேண்டும். கருணை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…



 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்