Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,158.24
535.15sensex(0.74%)
நிஃப்டி22,217.45
162.40sensex(0.74%)
USD
81.57
Exclusive

Nalaya Raasipalan: இந்த ராசிக்காரரின் வெற்றி அனைவரையும் வாயடைக்க செய்யும்… ஜூலை 10, 2022 ராசிபலன்!     

Manoj Krishnamoorthi July 09, 2022 & 13:00 [IST]
Nalaya Raasipalan: இந்த ராசிக்காரரின் வெற்றி அனைவரையும் வாயடைக்க செய்யும்… ஜூலை 10, 2022 ராசிபலன்!     Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                                                Tamil Online Horoscope Free

நேற்றைய ராசிபலன்(9:07:2022)           

வார ராசிபலன் (10:07:2022-  16:07:2022)    

நாளைய ராசிபலன் (11:07:2022)

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை


மேஷம்- கன்னி முதல் 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

எண்ணிய காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை அயராது போராடும் உங்களுக்கு அதற்கான பாராட்டு கிடைக்கும், உங்களின் கீர்த்தி உயரும். அதிகமான செலவுகள் வரும், நிதி நிலையை சமாளிக்க முடியாமல் போகலாம், எனவே செலவில் கட்டுப்பாடு வேண்டும், பணத்தை மிகவும் கவனமாக செலவழியுங்கள்.

வீட்டில் இன்று ஓரளவு இயல்பு நிலை இருக்கும், பெரியதாக உரையாட மாட்டீர்கள். காதல் வாழ்வில் காதலை வெளிப்படுத்த இன்று முயலலாம். உணவில் கவனம் கொள்ள வேண்டும், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். புகழ்!    

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்கள் அமைதியான மனநிலைக்கு  இன்று நண்பர்களின் மூலம் மேலும் நிம்மதி கிடைக்கும். தொழிலில் திட்டமிட்டு செயல்படுவது வெற்றி அளிக்கும். அலுவலகத்தில் முக்கியத்துவத்தை உணர்த்த  பல திட்டங்கள் வகுப்பீர்கள். 

குடும்ப வாழ்கையில்  சிறிய ஊடல் வரும், அதை பெரியதாக கருதமாட்டீர்கள். காதல் வாழ்வில் நட்பு அதிகரிக்கும்.  செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது. கல்வி முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்:  5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

வெற்றிக்காக இன்று அதிகம் போராட வேண்டிய நிலை உருவாகும். பணியில் சில தவறுகள் நடக்கக்கூடும். சிலருக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். நிதி பிரச்சனைகள் சில உருவாகும், அதை சமாளிக்க இன்று அதிகம் போராட வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் குறையும், கணவன் மனைவி உறவில் பெரியதாக இன்று சந்தோஷம் இருக்காது, நண்பர்களின் உதவி மனதை ஆனந்தமாக்கும்.  கல்வி முன்னேற்றம் இருக்கும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்:  6

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்றைய தினம் வழக்கம்போல் இல்லாமல் சற்று மாறுபட்டதாகத் தோன்றும்,இதுவரை மனதில் குடிகொண்ட  சந்தேகம், ஊக்கமின்மை போன்ற எண்ணங்களை விடுத்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பணியிடத்தில் இன்று பல மாற்றங்கள் செய்வீர்கள், உங்களின் முயற்சிக்கு சக பணியாளர் உதவியாக இருப்பர்.

உங்கள் குடும்பத்தினரின் அன்பைப் புரிந்து கொள்வீர்கள். வீட்டில் இணக்கமாகப் பழகுவீர்கள். நிதி நிலையில் இன்று கணமான செல்வ வரவு கிடைக்கும், ஊக்கத் தொகை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம் 

அதிர்ஷ்ட எண்:  6

கும்பம் (Aquarius 2022 Horoscope)

 உங்களின் நம்பிக்கையான பேச்சால் உங்கள் சுற்றத்தாருக்குப் புத்துணர்ச்சி அளித்து  நீங்களும் உற்சாகமாக இருப்பீர்கள்.  நீண்ட காலமாகக் காத்திருந்த நல்ல தகவல்கள் கிடைக்கும்.  பணியில் அபாரமான வளர்ச்சி காட்டுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் நேர்மையான அணுகுமுறை பாராட்டு அளிக்கும்.

குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும். பயணம் செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சனை எதுவுமில்லை. நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்:  5

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்களின் சாதுரியமான அணுகுமுறை தொழிலில் நல்ல மதிப்பை உருவாக்கும், அலுவலகத்தில் ஆதாயம் பெறுவீர், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது . பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதை நல்லபடியாக முடிப்பீர்கள். நிதி நிலையில் பண வரவு குறைவாக இருந்தாலும் செலவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

வீட்டில் சமநிலையுடன் இருப்பீர்கள், கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக அமையும். இன்று காதல் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி உங்களைத் தொற்றிக் கொள்ளும், சிலரின் காதல் திருமணத்தில் முடியும். உடல்நலத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை வரும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்:  1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்