Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: இந்த ராசிக்காரரின் சேமிப்பு எல்லாம் மருத்துவ செலவாக மாறும்… ஜூலை 25, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 24, 2022 & 10:40 [IST]
Nalaya Sirappu Rasipalan: இந்த ராசிக்காரரின் சேமிப்பு எல்லாம் மருத்துவ செலவாக மாறும்… ஜூலை 25, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Sirappu  Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் திங்கட்கிழமை (25.07.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது,

 

வார ராசிபலன் (24.07.2022- 30.07.2022)

மாத ராசிபலன் (ஆடி மாதம் 2022)

நல்ல நேரம்

காலை: 09:15-10:15 வரை

மாலை: 04:45-  05:45 வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (25.07.2022, திங்கள்கிழமை)

துலாம் (Libra 2022 Horoscope)

உங்களுக்கு இன்றைய நாள் சற்று சாதகமாக இல்லாதக் காரணத்தால் கொஞ்சம் நிதானம் தேவை, கல்வி நிலையில் சக மாணவர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். தொழிலில் இலக்கை முடிக்கக் கடினமாக இருக்கும், தடைகள் பல உருவாகும். குறித்த நேரத்தில் முடிக்க முடியாது கால தாமதம் ஏற்படும். செல்வ நிலையில் செலவு தான் உயர்ந்து இருக்கும்.

வீட்டில் அமைதியாக பொழுதைக் கழிப்பீர், தனிமையில் நேரத்தை செலவிட எண்ணுவீர்கள். உங்கள் நண்பர்களின் உதவி பெரிய பலமாக அமையும். மனக் குழப்பம் தூக்கமின்மை பிரச்சனை அளிக்கும். சிரமம்!

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்களுக்கு இன்று கிடைக்கும் உதவி மிகப்பெரிய பலமாக அமையும், தொழில் ஸ்தானத்தில் எதிர்பார்க்க நேரத்தில் புதிய மனிதரின் மூலம் முக்கியமான உதவி கிடைக்கும். சுய தொழிலில் வாடிக்கையாளரின் ஆதரவு வியாபாரத்தைப் பெருக்கத் தூண்டும். நிதி நிலை நன்றாக உள்ளது.

கணவன் மனைவி உறவு இயல்பாக இருக்கும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வர். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமையும். கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. ஆதரவு! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் வாய்ப்பை அளிக்கும்,  குடும்பத்தினரின் ஆலோசனை தொழிலில் நல்ல பலன் அளிக்கும். வெற்றிக்காக அதிகமாகப் போராட வேண்டிய நிலை இருக்கும். வேலையை முடிப்பதில் உறுதியாக இருக்கும் மன உறுதி கிடைக்கும். 

காதல் வாழ்க்கையில் உங்கள் கடுமையான வார்த்தையால் காயப்படுத்துவீர்கள். வீட்டில் பொறுமை காக்க வேண்டும். செல்வ நிலையில் இன்று அதிகமான செலவுகள் இருக்கும். ஆன்மிக ஸ்தலத்துக்கு செல்லும் சூழல் உருவாகும். உடலில் சிறிய தொல்லைகள் இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 6

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்று உங்கள் லட்சியத்தின் மேல் உங்களுக்குப் பயம் வரும்,அமைதியாக இருப்பது பலவித பிரச்சனைத் தடுக்கும். மாணவர்கள் சில போட்டிகளில் கலந்து வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் உழைப்பின் வேகம் அதிகமாகும்,  வேலைகளை முடிக்கும் வரை கவனம் சிதாறாது.

வீட்டில் சிறிய சச்சரவு வரும் அதனால் குடும்பத்தின்  ஒற்றுமை அடிப்படும். காதல் வாழ்வில் புதிய திருப்பங்களை உருவாக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் பேச்சு பல பிரச்சனையை உருவாக்கும், அமைதி காப்பது நன்று. அலுவலகத்தில் செய்யும் முயற்சிகள் வெற்றி அளிக்கும், மேலதிகாரியின் பாராட்டு மனதுக்கு இன்பமாக இருக்கும். வீணான வாக்குவாதம் இன்று நேரத்தை வீணடிக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். 

குடும்பத்தினரின் ஆதரவு இன்று அதிகமாகத் தேவைப்படும். காதல் வாழ்க்கையில் உங்கள் கோபம் உறவு முறிவை ஏற்படுத்தும். நண்பர்களின் அறிவுரை பிரச்சனையைப் போக்க உதவும். உடல்நலத்தில் அதிக கவனம் காட்ட வேண்டும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்று நீங்கள் நினைக்கும் செயலை முடிக்கும் வரை அயராது உழைத்து கொண்டு இருப்பீர்கள். தொழில் போட்டிகளை எளியதாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில் முன்னேற்றத்தைப்  பற்றிய சிந்தனை இன்று அதிகமாக இருக்கும்.

குடும்பத்தினருடன் பேசும்போது பொறுமை இருங்கள்.  திருமண வாழ்வில் பேச்சின் மூலம் வாழ்க்கை துணையைக் காயப்படுத்தக் கூடும். நிதி நிலையில் அதிகமான செலவுகள் இன்று இருக்கும். மன நிலை வெற்றியைப் பற்றி சிந்திப்பதால் பதட்டமாக இருக்கும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்  

அதிர்ஷ்ட எண்: 1

இன்றைய நட்சத்திர பலன் (25.07.2022, திங்கள்)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்