Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சகிப்புத்தன்மையுடன் இருந்தால் நல்லது...!| September Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
சகிப்புத்தன்மையுடன் இருந்தால் நல்லது...!| September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

செப்டம்பர் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், கும்பம் ராசியில் சூரியன் மற்றும் புதன், மீனம் ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்மத்திலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், செப்டம்பர் 04 ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிலைக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் செப்டம்பர் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

சகிப்புத்தன்மையுடன் இருந்தால் நல்லது...!| September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 மகரம்:

வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகள் சாதகமாகும். குடும்பத்தின் நலனிற்காக பல யோசனையை மேற்கொள்வீர்கள். வியாபாரம் வளர்ச்சி நன்றாக இருக்கும். குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். மன உளைச்சல், அலைச்சல் வரலாம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் வாங்கும் முன்பு யோசித்து செயல்படுங்கள். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்காது. முதியவர்கள் உணவு எடுத்துக்கொள்வதில் கவனம் வேண்டும்.

சகிப்புத்தன்மையுடன் இருந்தால் நல்லது...!| September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 கும்பம்:

பொருளாதாரம் நீங்க எதிர்பார்த்த வகையில் இருக்காது. கடன் பிரச்சனை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழல் அமையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறி இல்லாதது போல் இருக்கும். பணம் நெருக்கடி அதிகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருந்தால் நல்லது. சொத்து சேர்க்கை பற்றி யோசித்து முடிவு எடுங்கள். தேவையில்லாத புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் இருக்கும். உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும்.

சகிப்புத்தன்மையுடன் இருந்தால் நல்லது...!| September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 மீனம்:

வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். முதலீடு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடன் பிரச்சனை குறையும். சொத்து சேர்க்கை சாதகமாக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். தம்பதிகளுக்கு இடையே கருத்து மோதல் வந்து நீங்கும். திருமண நிகழ்வுகள் தாமதமாகலாம். குழந்தை பாக்கியம் சாதகமாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்தினால் மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். சற்று சோர்வாக இருப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். சில விஷயங்களை புதுப்பிக்க வைக்கும் செலவு ஏற்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்