Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஏப்ரல் மாத்தில் சிம்ம ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. | Simmam April Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஏப்ரல் மாத்தில் சிம்ம ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. | Simmam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் சிம்மம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

ஏப்ரல் மாத்தில் சிம்ம ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. | Simmam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

சூரிய பகவானை ராசி அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினரே! கேது பகவான் உங்க ராசிக்கு 3 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால், நீண்ட நாட்களாக புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் சாதகமான பலன் கிடைக்கும். அதேபோல், பணி மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கும் புதிய பணிமாற்றம் ஏற்படும். வேலை தேடிக்கொண்டிருக்கும் சிம்ம ராசியினருக்கு விரும்பிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த மாணவர்களுக்கு இந்த மாதத்தில் படிப்பில் ஈர்ப்பு அதிகரித்து சிறந்து விளங்குவீர்கள். 

ஏப்ரல் மாத்தில் சிம்ம ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. | Simmam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

தோல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். கோர்ட், வழக்கு சார்ந்த பிரச்சனையில் இருந்த தடை, தாமதம் விலகி சாதகமான பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக திருப்பித்தர முடியாமல் இருந்த கடனை பிரச்சனையில் இருந்து விடுவுகாலம் பிறக்கும். குரு பலத்தால், திருமண வயதில் இருக்கும் சிம்ம ராசியினருக்கு திருமண யோகம் கூடி வரும். பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் புதன், சுக்கிரன், ராகு பகவானால் தந்தையுடன் தேவையற்ற கருத்துமோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

வணங்க வேண்டிய தெய்வம்: பைரவர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்