Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

திடீர் திருப்புமுனை.. தொட்டது துலங்கும் மாதம்... | Thulam April Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
திடீர் திருப்புமுனை.. தொட்டது துலங்கும் மாதம்... | Thulam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் துலாம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

திடீர் திருப்புமுனை.. தொட்டது துலங்கும் மாதம்... | Thulam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

உங்க ராசிக்கு 6 ஆம் இடமான சத்ரு ஸ்தானம், வெற்றி ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்வதால் வெற்றிகள் தேடி வரும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொட்டது துலங்கும். ஏப்ரல் 15 ஆம் தேதி பிறகு 4 கிரகங்களின் சேர்க்கை உருவாகிறது. இதனால், நட்பு வட்டாரம் அதிகரிக்கும். பல புதிய அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பிரபலங்களின் அறிமுகம் ஏற்படும். பணியிடத்தில் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டு, புகழ் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சுமை குறையும். 

திடீர் திருப்புமுனை.. தொட்டது துலங்கும் மாதம்... | Thulam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

பிரிந்து சென்ற உறவினர்கள் தானே வந்து பேசுவார்கள். மாணவர்களுக்கு அற்புதமான மாதம். உறவினர், நண்பர்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிர்பாரா உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். எந்த காரியத்தையும் மனஉறுதியுடன் செய்து முடிப்பீர்கள். துணிச்சலாக செயல்படுவீர்கள். இருப்பினும், துணையால் அவ்வப்போது கருத்துமோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீங்க அனுசரித்துக் கொண்டால் பெரிய பிரச்சனை வராது. 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வணங்க வேண்டிய தெய்வம்: மகா கணபதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்