Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: MAY 16, 2022 அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் திளைக்கும் ராசியா உங்களுக்கு!

Manoj Krishnamoorthi May 15, 2022 & 10:40 [IST]
Tomorrow Horoscope Tamil: MAY 16, 2022 அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் திளைக்கும் ராசியா உங்களுக்கு!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் ஓர் அற்புதமான நாளாக இருக்கும் இன்றைய நாள் இருக்கும், அலுவலக பணிகளை இன்பமாக செய்வீர்கள். விருந்தினர் வீட்டுக்கு அல்லது வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது, குடும்பத்தில் ஆனந்தம் அதிகமாக இருக்கும். பணப் புழக்கம் கையில் திருப்திகரமாக இருக்கும், கல்வி நிலையில் சற்று கவனக் குறை இருக்கும். திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்:  4

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

செலவுகள் பல இருந்தாலும், நிதி நிலை சிறப்பாக இருக்கும். எதிர்கால சேமிப்பு அதிகமாகும்.  தொழிலில் உங்கள் தகுதிக்கு ஏற்ற சன்மானம் உங்களைத் தேடி வரும். நண்பர்களால் மனம் ஆனந்தமாகும். மனம் இன்று நிம்மதியாக இருக்க உங்கள் நண்பர்கள் ஒரு முக்கியமான காரணமாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வது சுகமாகும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உடல் சோர்வாக இருப்பதால் இன்று நீங்கள் செய்யும் காரியத்தில் சிறிய தாமதம் உருவாகும், சரியான திட்டமிடல் வேண்டும். வீட்டில் பொறுமையாக இருப்பது அன்பை அதிகப்படுத்தும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகமாகும். இன்று செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், எதிர்கால தேவைக்காகச் செலவு செய்வதால் மன வருத்தம் அளிக்காது. தொழிலில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும், உங்கள் பணியைக் கண்டு புகழாரம் சூட்டுவர். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்று உங்களுக்கு உடல்நலத்தில் தொல்லைகள் இருக்கும். ஆரோக்கியக் குறை தொழிலில் தவறுகளை உருவாக்கும். பணியிடத்தில் உங்கள் சிறப்பான சிந்தனை பிரச்சனைகளைச் சரி செய்யும். குடும்ப வாழ்க்கையில் புரிதல் இருக்கும், வருங்காலத்தைப் பற்றிய அச்சம் மன நிம்மதியைக் கெடுக்கும். காதல் வாழ்க்கையில் பெரியதாகப் பிரச்சனைகள் இருக்காது. கல்வியில் கவனம் குறையும். நிதி நிலையில் புதிய வரவு இருக்காது, அதனால் கையிருப்பைக் கவனமாக செலவு செய்ய வேண்டும். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்று நீங்கள்  செய்யும் காரியத்திற்கான வெகுமதி உஙளைத் தேடி வரும். எதிர்பாராத சம்பவங்களால் இன்று உங்களின் மனதை ஆனந்தமாக்கும். உங்களின்  செல்வ நிலை சிறப்பாக உள்ளது. இன்று  காதல் விவகாரம் நிச்சயம் பாசிடிவான ரிசல்டைத் தரும். வீட்டில் உள்ளவர்கள் உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்வார்கள். அங்கீகாரம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

 

மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் வைகாசி மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்று சமூகத்தின் மீது உள்ள ஆர்வம் உங்களைப் பொதுக்காரியத்தில் ஈடுபடுத்தும். சில பணக் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கையைத் தளரவிட மாட்டீர்கள். உங்களின் தர்மம் உங்களின் கஷ்டங்களைத் தீர்க்கும். உடல் நலம் நன்றாக இருந்தாலும் சற்று சோர்வாக உணர்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சிறு கருத்து வேறுபாடு இருக்கும். விருப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 7

துலாம் (Libra 2022 Horoscope)

இன்று ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும், சமுக பணியின் மீது ஆர்வம் வந்து சமூகப் பணி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரம் சுமாராக உள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறப்பான நாளாகும். செலவு அதிகமாகும். தொழிலில் அதிகமான கவனம் வைப்பது முன்னேற்றத்தை அளிக்கும். திருமணமாகாத துலாம் ராசிக்காரருக்கு இன்று திருமண பேச்சு ஆரம்பிக்கும். கல்வியில் நல்ல வளர்ச்சி இருக்கும். வாழ்வு! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று தொழிலில் அமோக வளர்ச்சி இருக்கும், எதிர்பாராத வெகுமதி கிடைக்கும். மேலும் செலவு குறைவதால் இன்று பணம் கொஞ்சம் கையில் இருப்பதாக உணர்வீர்கள். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். அமைதி காப்பது நன்மை, வேலையில் முன்னேற்றம் தோன்றும், அலுவலகத்தில் கடினமான வேலைகளை நீங்கள் விரைவாக முடித்து சாதனைப் படைப்பீர்கள். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

சரியான திட்டமிடல் இன்று உங்களுக்கு அலைச்சலைக் குறைக்கும். இன்று செலவுகள் இயல்பை விடச் சற்று அதிகமாக  இருப்பதால்  கையில் பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக  இருப்பதாக உணரப்படுவீர்கள், சுப காரியங்களுக்குச் செலவு செய்வதால் மன வருத்தம் தேவையில்லை. சுப விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள், மனம் நிம்மதி அடையும். குடும்ப வாழ்க்கை நல்ல உறவு இருக்கும். மாணவர்கள் நேரத்தை விரயமாகக் கூடும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Capricorn 2022 Horoscope)

ஆர்வத்துடன் பணிகளை செய்வதால் இன்று தொழில் அமோக வளர்ச்சி பெற்று தன லாபம் அதிகமாகும். இன்று உங்கள் காதல் விவகாரத்தில் பிரச்சனை வரும் அதனால் திடீர் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் வரலாம். அலுவலகத்தில் போட்டி உருவாகும். செல்வ நிலையில் பாதிப்பில்லை, எதிர்பார்த்த நேரத்தில் பண உதவிக் கிடைக்கும். உடல் நலம் நன்றாக உள்ளது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 6

 

மேலும் படிக்க: PART 2, துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் வைகாசி ராசிபலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்கள் ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும், அதனால் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று செல்வ நிலையில் சரியாக இல்லை, எதிர்காலத்திற்காக  முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். அமைதியைக்  கடைப்பிடிக்க வேண்டும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும். தொழில் நிலையில் பிரச்சனை இல்லை. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்களின்  எண்ணம் நிறைவேற  உடலும் மனமும் ஒருநிலையிலிருந்து உதவும், மனதில் இருக்கும் தெளிவான சிந்தனைகளின் மூலம் உங்களுக்கு தொழிலில் வரும் பிரச்சனையைச் சமாளிக்க முடியும். இன்று உங்கள் இலக்கை நெருங்குவீர்கள், பண வரவு இருக்காது. குடும்ப வாழ்வு சிறப்பாக உள்ளது. கல்வி நிலை அமோகமாக உள்ளது. தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனு க்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்