Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Viruchigam : ஐப்பசி மாதம் முழுக்க விருச்சிக ராசிக்கு செலவு தான்... ஆனால் தொழிலில் ?

Manoj Krishnamoorthi October 12, 2022 & 11:00 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil Viruchigam : ஐப்பசி மாதம் முழுக்க விருச்சிக ராசிக்கு செலவு தான்... ஆனால் தொழிலில் ? Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் விருச்சிகம் ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022- விருச்சிகம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Viruchigam)

பொது பலன்: 

உங்களுக்கு குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பலமாக இருப்பதால் தேவையான பணப்புழக்கம் கிடைக்கும், ஆனால் சுப விரையம் உண்டாகும். எண்ணிய காரியத்தில் முயற்சி செய்வீர்.  ஆனால் 6 இல் இராகு இருப்பதால் வெற்றியைப் போராடி தான் பெற வேண்டும்.  

குடும்ப  வாழ்க்கை: 

வீட்டில் பெரியவர்களுடன் கருத்து மோதல் ஏற்படும். இரத்த சொந்தத்துடன் விரிசல் ஏற்படலாம், நிதானமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  12 இல் இருக்கும் சுக்கிரன் குடும்பத்திற்கு தேவையான செலவு செய்ய வைப்பார். குழந்தைகள் மூலம் ஆதாயம் உண்டு. 

தொழில்: 

செவ்வாய் 8 இல் இருப்பதால் தொழிலில் நிதானமாக இருக்க வேண்டும், வேலையில் அலைச்சல் அதிகமாகும்.  வேலையில் பணிச்சுமை அதிகமாகும், ஆனால் புதனின் சாதக பார்வை உங்களுக்கு சவாலான பிரச்சனையை சமாளிக்கத் தூண்டும். தேவையான அளவு பணப்புழக்கம் இருக்கும்.  ஊடகத் துறை, கமிஷன் மற்றும் வியாபாரத் துறை சார்ந்தவர்களுக்கு  லாபம் உண்டாகும்.

உடல்நலம்: 

ராசியின் அதிபதி செவ்வாயின் 8 இல் இருப்பது வலி வேதனை அளிக்கும், தெளிவான எண்ணம் இருக்காது. எப்போதும் குழப்பத்துடன் இருப்பீர். ஆரோக்கியத்தில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர்,10, 11, 12  

 

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்