Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indraiya Raasi Palan in Tamil: இன்றைய தினத்தில் அதிகமான செலவை சந்திக்கப் போகும் அந்த ராசிக்காரர் நீங்களா! 

Manoj Krishnamoorthi May 19, 2022 & 17:15 [IST]
Indraiya Raasi Palan in Tamil: இன்றைய தினத்தில் அதிகமான செலவை சந்திக்கப் போகும் அந்த ராசிக்காரர் நீங்களா! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 வரை

மாலை: 05:00-  06:00 வரை 

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்றைய நாள் ஓரளவு நன்றாக இருக்கும், இயல்பு வாழ்க்கை திரும்புவதாக உணர்வீர்கள். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும், இன்று உங்கள் பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது, லாபமான இடத்தில் முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும். நலம்!    

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும், உங்கள் இன்பமான மனநிலை இன்று அலுவலகத்தில் சக பணியாளரிடம் நட்பு உறவு அதிகமாகும். உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். நிதிநிலையில் பிரச்சனைகள் ஏதுமில்லை, உங்களுக்கு சாதகமாக நிலுவையிலிருந்த தொகை வரும், திடீர் செலவுகள் வரும். ஆரோக்கியம் நேர்மறையாக இருக்கும், உடல்நலத்தில் அதிக கவனம் வேண்டும்.வியாபாரம் நன்றாக இருக்கும், பொறுமையாக இருப்பது வாடிக்கையாளரைக் குறைக்காது. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5 

 

முழுவதும் படிக்க: இந்த வார ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்பமான மனநிலையுடன் இருக்கும் நாளாக இந்த நாள் இருக்கும், மேலும் உங்கள் தொழில் ஸ்தானம் திருப்தியாக இருக்கும். பணியிடத்தில் வேலைச் சுமை குறைவாக இருக்கும். வீட்டில் இன்று அன்பான சூழ்நிலை உருவாகும். உங்கள் திருமண வாழ்க்கையில் ஓரளவு புரிதல் இருக்கும். இன்று உங்கள் ராசிக்கு செல்வ நிலை அமோகமாக இருந்தாலும் செலவு அதிகமாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்கள் வாழ்வில் இன்று சகஜமான நாளாக இருக்கும், இன்று வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்காது, நிதி கையில் ஓரளவு இருக்கும். இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும், போட்டித் தேர்வுக்கு முயற்சி செய்பவர்கள் வெற்றி கொள்ளும் நேரமாகும். காதல் வாழ்க்கை மிகவும் இன்பமாக இருக்கும். ஆனந்தம்!  

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்:  6

சிம்மம் (Leo 2022 Horoscope)

இக்கட்டான சூழ்நிலையிலும் தைரியமான முடிவுகள் எடுத்து கடுமையாகப் போராடும் சிம்ம ராசிக்காரரே இன்று மனம் அமைதியாக இருக்கும், ஆன்மீக எண்ணம் மனதைத் தெளிவாக்கும். தொழில் நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும், கவனமான செயல்பாடு உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து  செல்லும். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், மருத்துவ செலவு இருக்கும். நிதி நிலை வரவுக்கும் செலவுக்கு சமமாக இருக்கும். கலவி நிலையில் பாதிப்பு இல்லை, இயல்பாக இருக்கும். நிம்மதி!    

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

 

மேலும் படிக்க: வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

கன்னி (Virgo 2022 Horoscope)

தெளிவான எண்ணமே இன்பமான வாழ்வின் ஆதாரம் என்ற  உண்மையை உணர்ந்த உங்களுக்கு இன்று தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் ஆனால் அதைப் பெற அதிகமாக அலைய வேண்டும். அலுவலகத்தில் உங்கள் சுறுசுறுப்பான இயல்பு அனைவரையும் உற்சாகப்படுத்தும். திருமண வாழ்க்கையில் இன்று சண்டைகள் உதிக்கும். நிதி வளர்ச்சி  செலவுகள் மட்டுமே இருக்கும், சரியான திட்டமிடல் இன்று சேமிப்பைப் பாதிக்காது. கல்வி ஸ்தானம் அமோகமாக உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளது. விரைய செலவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் நிதானமான செயல்பாட்டுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கொட்டும் இன்று உங்கள் தொழில் ஸ்தானம் இன்று திருப்திகரமாக இருக்கும்.  நிதி வளர்ச்சி அமோகமாக  இருக்கும், செல்வ நிலை உயரும். குடும்பத்தில் இயல்பான நிலை இருக்கும், காதல் வாழ்க்கையில் சிறிய பிரச்சனைகள் வரும் வெளிப்படையாக பேசிக்கொள்வது உறவைக் காக்கும். உடல்நலம் சிறப்பாக உள்ளது. ஏற்றம்! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

 

மேலும் படிக்க: வைகாசி ராசிபலன் PART 2, துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் ராசிபலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

அமைதியான வாழ்க்கை வாழும் விருச்சிக ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு சற்று போராட்டம் நிறைந்ததாக இருக்கும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். இன்று உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும், ஆனால் கையில் பணம் நிலைக்காது. குடும்பத்தில் பொறுமையாக இருக்க வேண்டும் அது  குடும்பத்தின் ஒற்றுமையைக் காக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கோளாறு இருக்கும், அலட்சியமாக இருக்காமல் உடலே மருத்துவரை அணுகவும். ஒத்துழைப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Sagittarius 2022 Horoscope)

அமைதியான சுபாவம் கொண்ட உங்களின் கோபத்தின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதைச் சுற்றத்தார் இன்று அறிந்து கொள்ளுவர். நிதி நிலை மேம்படும். பொறுமையாக இருப்பது ஆரோக்கியத்தைக் கெடுக்காது. அலுவலகத்தில் வேலை வழக்கம்போல செயல்படாது. உங்களின் மதிப்பைப் பிறர் அறிந்து கொள்ளுவார்கள். கல்வியில் பாதிப்பு இல்லை. குடும்ப வாழ்வு ஓரளவு நன்றாக உள்ளது. கால தாமதம்!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்கள் தெளிவான சிந்தனை உங்கள் தொழிலில் இன்று சிறிய மாற்றங்கள் நிகழும். குடும்பத்தில் இன்று உங்கள் கருத்துக்கு அதிக மதிப்பு இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. மாணவர்களுக்குக் கிடைக்கும் திடீர் உதவி அவர்களை உற்சாகப்படுத்தி வேலை செய்யத் தூண்டும். நிதி நிலை நன்றாக உள்ளது. சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன்

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் (Aquarius 2022 Horoscope)

சாமத்தியத்தின் திருவுருமான உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவரின் உதவி கிடைப்பதால் வேலைச் சுமை குறைவாக இருப்பதுபோலத் தோன்றும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. செல்வ நிலை நன்றாக இருக்கிறது, சேமிப்பு செய்து கொள்வது உத்தம். திருமண வாழ்வில் நெருக்கம் அதிகரிக்கும். இனிமையான நாள்!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்கள் இனிமையான நடவடிக்கை இன்று அலுவலகத்தில் நல்ல சூழலைத் தரும், உங்கள் சக பணியாளருடன் ஒற்றுமையாக உழைப்பீர்கள். வியாபாரம் நல்ல லாபம் தரும். குடும்பத்தில் இன்று நிம்மதியாக இருப்பீர்கள். செல்வ நிலை நன்றாக உள்ளது, எதிர்கால சேமிப்பு சிறப்பாக இருக்கும். கல்வி ஸ்தானம் அமோகமாக உள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஆற்றலுடன் செயல்படுவீர்கள். வளர்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்