Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan:மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா...! மே 21, 2022 இன்றைய ராசிபலன்! 

Manoj Krishnamoorthi May 20, 2022 & 15:00 [IST]
Nalaya Rasi Palan:மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா...! மே 21, 2022 இன்றைய ராசிபலன்! Representative Image.

  Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

புத்துணர்ச்சியான மனநிலை மீண்டும் வேகத்துடன் உழைக்கத் தூண்டும் உங்கள் தொழில் ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது, மேலதிகாரியின் மதிப்பைப் பெறுவீர்கள்.வீட்டில் இன்பமாக இருப்பீர்கள், சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள். காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது, நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பொழுதை செலவிடுவீர்கள். செல்வ நிலை நன்றாக இருக்கும். கல்வி ஸ்தானம் ஓரளவு நன்றாக இருக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

பிறருக்கு செய்யும் உதவி நிச்சியம் நமக்கு நன்மையைத் தரும் என்பதை அதிகமாக நினைவில் கொண்டு உதவி செய்யும் குணம் படைத்த  உங்களுக்கு இன்று சரியான திட்டமிடல் நேரத்தை விரையமாக்காது. உங்கள் அலுவலகத்தில் சிறு தடைகள் உருவாகும், அதைச் சரி செய்ய அதிக நேரம் செலவாகும்.  வீட்டில் இன்று நீங்கள் அமைதியாக இருப்பது புதுமையாக இருக்கும். திருமண வாழ்வில் துணையுடன் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். ஆதரவு!   

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Gemini 2022 Horoscope)

போராடும் குணம் கொண்ட உங்களுக்கு இன்று அலுவலகத்தில் அதிகமான போராட்டம் இருக்கும்,  சக பணியாளரின் உதவி இலக்கை நெருங்க உதவும். குடும்பத்தில் அமைதியான நிலை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் முன்னேற்றத்துக்கு உதவியாக இருப்பார். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நண்பர்களின் உதவி இன்று தேவைப்படும். செல்வ நிலை சரியில்லை, தேவையற்ற செலவுகள் பல செய்வீர்கள்.  செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5 

கடகம் (Cancer 2022 Horoscope)

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட கடக ராசிக்காரரே இன்று திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது, கணவன் மனைவி இடையில் புரிதல் அதிகமாகும். திருமணமாகாத கடக ராசிக்காரருக்கு சுபநிகழ்ச்சி நிகழும் தருணம் உருவாகும். செல்வ நிலை சிறப்பாக உள்ளது. அலுவலகத்தில் இன்று உங்கள் முக்கியத்துவம் உணரப்படும். இன்று உறவினர் வருகைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. உடல்நலத்தில் பிரச்சனை ஏதுமில்லை. கல்வியில் கவனமாக இருக்க வேண்டும். நிம்மதி! 

 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

மேலும் படிக்க: வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

சிம்மம் (Leo 2022 Horoscope)

நிம்மதியான  மனநிலை இருப்பதால் உங்கள் ராசிக்கு இன்றைய தினம் முழுவதும் உற்சாகமாக இருக்கும்,  ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகும். இன்று தொழிலில் அதிகமான உழைப்பு தேவைப்படும், நிலுவையிலிருந்த வேளைகளை முடித்து காட்டுவீர்கள். இன்று உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், பண வரவு இன்று சற்று குறைவாக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும், ஓய்வு எடுப்பது. மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.  மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

இயல்பான வாழ்க்கை வாழும் கன்னி ராசிக்காரரே உங்கள் தன்னம்பிக்கை உங்களை இன்பமாக வைக்கும், தொழிலில் திருப்திகரமான வளர்ச்சி இருக்கும். பணியிடத்தில் இன்று மிதமான சூழல் இருப்பதாக உணர்வீர்கள். நிதி நெருக்கடி உருவாகும். திருமண வாழ்க்கையில் ஊடல்கள் அதிகமாகும், வெளிப்படையான பேச்சு  இன்று உங்கள் உறவைக் காக்கும். ஆர்வம்!  

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

துலாம் (Libra 2022 Horoscope)

அனைவரிடமும் இயல்பாக நடக்கும் துலாம் ராசிக்காரரே இன்று உங்கள் அலுவலக வேலைகள் இறுக்கமாக இருக்கும், மேலும் உங்கள் அதிகமான வேளைச் சுமை ஓய்வு நேரத்தைக் குறைக்கும், உடல்நலம் சோர்வாக இருக்கும். நிதி வளர்ச்சி அமோகமாக உள்ளது ஆனால் செலவு அதைவிட அதிகமாக இருக்கும். கல்வி ஸ்தானம் மிகவும் நன்றாக இருக்கும். வீட்டில் இன்று இன்பமான சூழ்நிலை இருக்கும், திருமண வாழ்க்கை சகஜமாக இருக்கும்,  காதல் வாழ்வில் சிறிய ஊடல் வரும். சோர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

தெளிவான சிந்தனைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்றைய தினம் இன்பமாக இருக்கும், உத்தியோகத்தில் உங்கள் கடினமான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும், மதிப்பு கூடும். கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். இன்று எதிர்கால சேமிப்பில் நாட்டம் அதிகமாக இருக்கும்.  வீட்டில் அனைவரிடமும் நட்பான முறையில்  நடந்து கொள்ளுவீர்கள். இன்று உங்கள் உடல்நலம் சிறப்பாக உள்ளது. சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்று தொழிலில் இருக்கும் அதிகமான வேளைச் சுமை உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனையை உருவாக்கும். மனநிலை தெளிவாக இருக்காது, உங்கள் வழக்கமான அலுவலக வேலையில் தவறுகள் நடக்கும். குடும்பத்தில்  சிறிய குழப்பம் இருக்கும், நிதி பிரச்சனையால் வாக்குவாதம் உருவாகும். செல்வத்தைச் சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். கல்வி ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது. நிதானம் தேவை! 

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்:  4

மகரம் (Capricorn 2022 Horoscope)

நிம்மதியான வாழ்வை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று உருவாகும் இன்னல் நல்ல அனுபவமாக மாறும், இன்றைய தினம் உங்களுக்கு செய்யும் செயலில் தடையாக இருக்கும், இன்று தொழிலில் வளர்ச்சி பெரியதாக இருக்காது. காதல் வாழ்க்கை நல்ல அணுகுமுறை உருவாகும்,  குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். கல்வி நிலை அமோகமாக உள்ளது, உயர்கல்விக்காக வெளியூர் செல்லும் யோகம் உண்டு. பணம் அதிகமாக செலவாகும். ஆரோக்கியத்தில் இன்று கோளாறு ஏற்படும், மனம் வருத்தமடையும். உயர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 5

மேலும் படிக்க: வைகாசி ராசிபலன் PART 2, துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் ராசிபலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கையை எதிர்பார்த்த உங்களுக்கு இன்றைய நாள் செய்யும் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும், இன்று உங்கள் அலுவலகத்தில் திட்டபடி செயல்களைச் செய்து முடிக்க முடியாது. வீட்டில் அமைதி இருக்கும். நண்பர்களுடன் நேரம் செலவிட முடியும். வியாபாரத்தில் கவனமாக இருப்பது நஷ்டத்தைக் குறைக்கும், மேலும் இன்று செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. உடல்நலத்தில் அதீத கவனம் வேண்டும்.  கவனம்!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்று செய்யும் காரியத்தில் வெற்றி கிடைப்பது நிச்சயமாகும், மன நிலை தெளிவாக இருப்பதால் உத்வேகத்துடன் உழைக்கும். இன்று தொழிலில் தன்னம்பிக்கையுடன் உழைப்பீர்கள் தோல்வியைக் கண்டு தொய்வு அடையாமல் முயற்சி செய்வதை விறுத்த மாட்டீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இன்பமாக இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கல்வி நிலை நன்றாக உள்ளது. நிதி நிலை திருப்திகரமாக உள்ளது. உடல்நலம் நன்றாக இருக்கும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்:8

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்