Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Astrology in Tamil: இன்று பேச்சால் வம்பை இழுக்கும் அந்த ராசிக்காரர் நீங்களா..!  மே 23, 2022  தினசரி ராசிபலன்..!

Manoj Krishnamoorthi May 22, 2022 & 17:15 [IST]
Today Astrology in Tamil: இன்று பேச்சால் வம்பை இழுக்கும் அந்த ராசிக்காரர் நீங்களா..!  மே 23, 2022  தினசரி ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

எப்போதும் கலகலப்பாக இருக்கும் உங்களுக்கு இன்று இன்பம் அதிகரிக்கும். நண்பர்களுடன் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். அலுவலகத்தில் புதிய முயற்சிகளின் மூலம்  வெற்றி உருவாகும். செல்வ நிலை அமோகமாக உள்ளது. வீட்டில் அனைவரிடமும் நட்பாக நடந்து கொள்ளுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

பொறுமையாக இருந்தால் தரணியை ஆளும் யோகம் பெறலாம் என்பதை அறிந்த ரிஷப இராசிக்காரரே, இன்று உங்கள் காதல் விவகாரத்தில் பிரச்சனை வரும் அதனால்  திடீர் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் இருந்தாலும் நிம்மதியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் போட்டி உருவாகும், உங்கள் திறமை நல்ல பலனை அளிக்கும். செல்வ நிலையில் பாதிப்பில்லை, பண வரவு உண்டு எதிர்பார்த்த நேரத்தில் பண உதவிக் கிடைக்கும். தொழிலில் லாபம் வரும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் (Gemini 2022 Horoscope)

வசீகரமான குணத்தைக் கொண்ட மிதுன ராசிக்காரரே இதுவரை உங்களுக்கு இருந்த நேர்மறையான எண்ணங்கள் யாவும் தீர்ந்து, லட்சியத்தை நோக்கி ஓடுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த நம்பிக்கை அதிகமாகும். குடும்பத்தில் சிறிய மனப்போராட்டம் இருக்கும், வீட்டில் அமைதியின்மை இருக்கும். செல்வ நிலையில் இன்று செலவுதான் உயர்ந்து உள்ளது. மாணவர்களின் கல்வி ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உணவு பழக்கத்தால் அஜீரணக் கோளாறு ஏற்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Cancer 2022 Horoscope)

கலகலப்பான மனதுக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்று எதிர்மறை எண்ணங்கள் சில தோன்றலாம் ஆனால் அதை எளிதாகக் கடக்க உறுதியான மன வலிமை இருக்கும். தொழில் ஸ்தானம் ஓரளவு நன்றாக இருக்கும், சில தவறுகள் நடந்தாலும் அதை சரி செய்து விடுவீர்கள். திருமண வாழ்வில் அமைதியாக இருக்க வேண்டும், பேச்சால் வீண் வாக்குவாதம் உருவாகும். அதிகமான செலவுகள் இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை ஆனால் மனம் உளைச்சலாக இருக்கும். பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Leo 2022 Horoscope)

தன்னம்பிக்கை அதிகம் கொண்ட உங்களுக்கு இன்று பொறுமை அதிகமாக தேவைப்படும், குடும்பத்தில் பொறுமையாக இருப்பது நல்ல சூழலை உருவாக்கும். காதல் வாழ்க்கையில் உங்கள் இனிமையான வார்த்தைகள் நல்ல உறவு உருவாகும். திருமண வாழ்க்கையில் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். அலுவலகத்தில் ஆதரவு கிடைக்கும், சக பணியாளருடன் நல்ல உறவு ஏற்படும். பண வரவு உண்டு. ஆரோக்கியக் குறை இருக்காது ஆனால் உணவு கட்டுப்பாடு அவசியமாகும். ஈர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5, 8

 

மேலும் படிக்க: வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

கன்னி (Virgo 2022 Horoscope)

பிறரின் உதவியை எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் போராடும் குணம் கொண்ட கன்னி ராசிக்காரரே இன்று தொழில் வாழ்க்கை அமோகமாக உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும் ஆனால் குடும்ப  செலவுகளால் சேமிக்க முடியாது. வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலை உருவாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் (Libra 2022 Horoscope)

செய்யும் காரியத்தைத் தெளிவாக செய்தால் முன்னேற்றம் என்பது சீக்கிரமாகக் கிடைக்கும் என நம்பும் உங்களுக்கு இன்று தடைகள் அதிகமாக இருக்கும், உங்கள் தொழிலில் இலக்கை அடைய அதிக கவனமாக செயல்பட வேண்டும். குடும்பத்தில்  அன்பான சூழல் இருக்கும். குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும், விருந்தினர் வருகை இருக்கும். உடலில் சிறிய வலிகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி காப்பது சந்தோஷத்தைக் கெடுக்காது. இன்பம்!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

அமைதியான மனதுக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்று மனம் வருத்தமாக இருக்கும், அலுவலகத்தில் இருக்கும் அதிகமான வேலை உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டையும் சோர்வாக்கும். வீட்டில் இயல்பு நிலை இருக்கும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும், உங்கள் அணுகுமுறை நம்பிக்கை அளிக்கும். நிதி நிலையில் அதிக கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, நலமான உடல்நலம் இருக்கும். அலைச்சல்!   

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு (Sagittarius 2022 Horoscope)

யதார்த்தமான மனதைக் கொண்ட உங்களுக்கு இன்று மனம் நினைக்கும் இலக்கை அடைய முடியும், இன்று பணியிடத்தில் இன்று மடிப்பு கூடும். வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். இன்று உங்கள் குடும்ப வாழ்வில் நல்ல உறவு இருக்கும், புரிதல் அதிகமாகும். நிதி நிலை சிறப்பாக உள்ளது, கையில் பணப்புழக்கம் சிறப்பாக உள்ளது. பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வீர்கள். உடல்நலப் பிரச்சனைகள் இருக்காது. பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

 

மேலும் படிக்க: வைகாசி ராசிபலன் PART 2, துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் ராசிபலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

மகரம் (Capricorn 2022 Horoscope)

மன ஊறுதி அதிகம் தேவைப்படும் நாளாக இன்று இருக்கும், முறையான தியானம் தெளிவான மனநிலையை அளித்து தொழிலில் ஏற்படும் சவால்களைத் தீர்க்கும். இன்று திருமண வாழ்வில் அமைதியின்மை அதிகமாக இருக்கும். காதல் வாழ்க்கை அதீத கவனம் தேவை, சிக்கலில் மாட்டி கொள்வீர்கள். கையில் இன்று பணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் சில தொல்லைகள் இருக்கும். இன்று உங்கள் நண்பர்காளின் உதவியால் நிதி நெருக்கடியை சமாளிப்பீர்கள். உறுதி! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உணர்வுகளைக் கட்டுப்படுத்தினால் இன்பமான வாழ்க்கை உறுதி என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்று திடீரென உடல்நலத்தில் பிரச்சனை வரும், செலவுகள் அதிகமாகும். பேச்சைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்வது சண்டையை உருவாக்காது. வீட்டில் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். தொழிலில் மிகவும் கவனமாக இருங்கள் அது நடக்கும் தவறை உணர்த்தும், நேரத்தை விரையத்தைத் தடுக்கும். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி இன்று உங்களிடம் கண்டிப்பாக இருப்பார்.  குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 4

மீனம்(Pisces 2022 Horoscope)

பொருளாதார எற்றத்தை எதிர்பார்த்த மீன ராசிக்காரரே இன்று உங்கள் கைப்படும் காரியம் ஜெயமாக இருக்கும், சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் மற்றவரின் மதிப்பைப் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் சிரமத்தைக் கையாளுவது எளியதாக இருக்காது, சாதுரியமான சிந்தனை தேவைப்படும். நிதிநிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும், மனம் உற்சாகமாக இருக்கும், மாணவர்களின் கல்வி நிலை அமோகமாக உள்ளது. அனுசரணை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்