Wed ,Feb 28, 2024

சென்செக்ஸ் 72,500.18
-595.04sensex(-0.81%)
நிஃப்டி21,995.80
-202.55sensex(-0.91%)
USD
81.57
Exclusive

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023

Nandhinipriya Ganeshan Updated:
தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 07 ஆம் நாளுக்கான [24 ஆகஸ்ட் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 11.30 - 12.00 வரை

மாலை: ----

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பொருளாதார விஷயங்களில் வழக்கத்தை விட சிறப்பாக அமையும். முக்கியமான திட்டங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். எந்த செயலையும் தைரியத்துடனும் வலிமையுடனும் எதையும் எதிர்க்கொள்வீர்கள். கனிவான பேச்சுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். வியாபார முயற்சிகள் சாதகமாக அமையும். திறமைக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு பழைய முதலீட்டில் இருந்து லாபம் வந்து சேரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சிகள் வெற்றியாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பணியிடத்தில் வேலைகளை பகிர்ந்து செய்வதில் கவனம் அதிகமாக இருக்கும். துணையிடம் ஈகோ பிடிவாதத்தை தவிர்த்து பாசத்தை காட்டுவீர்கள். சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வீர்கள். 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நன்மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

லாபத்தை அதிகரிக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும், விரும்பிய அளவு பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் நீங்களே முதல் முயற்சி எடுத்து முன்னேறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்ததை விட வேலை சிறப்பாக இருக்கும். விலகிச் சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். பரிவர்த்தனைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். புதிய நபர்களின் சந்திப்பதில் கவனமாக இருக்கவும். 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு அதனால் சங்கடப்படுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். சிலர் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டியிருக்கும். புதிய நபரால் குடும்பத்தில் பிரச்சனை தலைதூக்கும். விருப்பங்கள் நிறைவேறுவதில் தடை வரும். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டுத் தொழிலில் திடீர் நஷ்டம் வரலாம். சிலருக்கு கடன் பிரச்சனையால் பயம் ஏற்படும். துணையிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். நிதி நிலையில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பீர்கள். உறவினர்களின் வழியில் சாதகமான சூழல் அமையும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தடைப்பட்ட பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடக்கவும். உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். முக்கியமான திட்டங்கள் குறித்து பிறரிடம் பகிர்ந்துக் கொள்வதைத் தவிர்க்கவும். உறவினர்கள் பண உதவி எதிர்பார்த்து வருவார்கள். 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நண்பர்கள் உதவியால் நினைத்த காரியம் நடந்து முடியும். புதிய நபர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருவாயில் இருந்த சங்கடங்களை சரி செய்வீர்கள். தடைகளை தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் இருந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். பெற்றோரின் ஆலோசனை நன்மை தரும். சிலர் பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

மனம் காட்டும் வழியில் செல்வீர்கள். எதிர்பாலினத்தவரால் எண்ணம் நிறைவேறும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். எந்த செயல்களிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பணஉதவி கிடைக்கும். சிலர் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சில முக்கியமான விஷயங்களில் நீங்கள் மேற்கொள்ளும் விவாதங்கள் பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் லாபம் பெறுவதற்கான நாள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து நன்மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். வாழ்க்கையில் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கடன் வாங்குவதை தவிர்க்கவும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும். எந்த செயல்களிலும் தடுமாற்றமும் குழப்பமும் உண்டாகும். எதிர்பார்த்த விஷயம் ஏமாற்றத்தை தரும். திடீர் நெருக்கடிகளால் சங்கடம் வரும். திட்டமிட்ட செயலில் ஈடுபட முடியாமல் போகும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். நீர்நிலைகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய நாள். வாக்குறுதிகளை கொடுக்கும்போது வார்த்தையில் கவனம் தேவை. வாகன பயணத்தின் போது அவசரம் காட்ட வேண்டாம்.

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் சில சங்கடங்கள் வரும். கவனமுடன் செயல்படவும். எதிர்பாலினத்தவரால் பிரச்சனைகளை சந்திக்க நேரும். தந்தைவழி உறுப்பினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். நினைத்தது நடக்க இழுத்தடிக்கும். பணியிடத்தில் பிறர் வேலையில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்