Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BMW S 1000 RR பைக் வேகம் சூறாவளி தான்...! | Upcoming Bikes 2023

Manoj Krishnamoorthi Updated:
BMW S 1000 RR பைக் வேகம் சூறாவளி தான்...! | Upcoming Bikes 2023Representative Image.

BMW நிறுவனம் வாகன உற்பத்தியில் சொகுசு ரக வாகனங்களை உற்பத்தி செய்யும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.  உலகப்போரின் போது விமான இன்ஜின்கள் உற்பத்தியில்   Bayerische Motoren Werke AG (BMW ) கால் பதித்தது. அன்று முதல் இன்று வரை சொகுசு கார் மற்றும் பைக்கில் இதற்கான நிலையான இடம் மோட்டார் சந்தையில் உண்டு. 

BMW மோட்டாரின் பக்காவான பர்ஃபாமன்ஸ் அனைத்து தரப்பினரையும் BMW சொந்தமாக ஆக்கி கொள்ள நினைக்க வைக்கும். BMW கார்களை தான் நாம் அதிக தேடி பார்ப்போம், அதற்கு முன்னதாகவே BMW Motorcycle உலகப்போரின் போதே உருவாக்கப்பட்டது. இந்த பதிவில் லேட்டஸ் வெளியீடான BMW S 1000 RR பைக்கின் பர்ஃபோமன்ஸ், விலை, சிறப்புகள் போன்ற சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

BMW S 1000 RR Review Tamil

BMW S 1000 RR பைக் வேகம் சூறாவளி தான்...! | Upcoming Bikes 2023Representative Image

BMW S 1000 RR பர்ஃபாமன்ஸ்

ரேஸிங் செய்ய ஆசைப்படும் டைரடர்ஸ்களுக்கு BMW S 1000 RR ஒரு நல்ல பைக்காக அமையும். இதன் 999 cc  மற்றும் டூயல் சேனல் ABS அசராமல் சாலையில் சீரி பாயும்,அதேநேரத்தில் பாதுகாப்பாகவும் வைக்கும். சுமார் 212.91 bhp பவர் வெளிப்படுத்தும் BMW S 1000 RR ஸ்மூத்தான 6 கியர்கள் கொண்டது.

BMW S 1000 RR பைக் வேகம் சூறாவளி தான்...! | Upcoming Bikes 2023Representative Image

BMW S 1000 RR சிறப்பம்சங்கள்

113 Nm டார்கில் 999 cc இல் செயல்படும் இந்த S 1000 RR பைக்கில் 6.5 இன் TFT console நமக்கு மிகவும் வசதியாக உள்ளது. இதன் twin LED ஹட்லைட் மற்றும் அசத்தலான பர்ஃபாமன்ஸ்  புதிய கலர் என அனைத்தும் ஒரு முறையாவது இந்த வண்டியை ஓட்டி பார்க்கனும் என்கிற ஆசையை ஏற்படுத்தும். 

சொகுசு வாகன உற்பத்தி நிறுவனத்தின் வெளியீடு என்பதால் மைலேஜ் பெரியலவ் இல்லை, 15.62 km மட்டுமே மைலேஜ் அளிக்கும்.  BMW பைக்கில் S 1000 RR லைட்டான ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ஆகும். இதன் எலக்ட்ரானிக் ஸ்பன்ஷன் மற்றும் முன்புறம் டிசைன் மட்டும் கவனம் கொடுத்தால் S 1000 RR நிச்சயம் பைக் ப்ரியர்களின் கலேக்‌ஷனில் இடம் கொள்ளும். 

BMW S 1000 RR பைக் வேகம் சூறாவளி தான்...! | Upcoming Bikes 2023Representative Image

BMW S 1000 RR விலை

பைக் ரைடர்ஸ்க்கு சரியான சாய்ஸ் என்பதில் சந்தேகம் இருக்காது. BMW பைக் என்பதால் இன்ஜின் பர்ஃபாமன்ஸ் சொகுசாக தான் இருக்கும்.S 1000 RR பைக்கை 2023 பிப்ரவரில்  மார்க்கெட்டில்  எதிர்பார்க்கலாம்.

3 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கின் விலை 19.75 லட்சம் முதல் 24.45 லட்சம் வரை நகரங்களுக்குள் மாற்றம் பெறும். அடுத்த ஆண்டு வரும் Ducati Panigale V4, Kawasaki Ninja ZX- 10R, Honda CBR1000RR-R போன்ற பைக்களுக்கு இது சரியான போட்டியாக அமையும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்