Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிம்பு வைத்து இருக்கும் BMW X6 என்ன இருக்குனு தெரியுமா..? | BMW X6 Review Tamil

Manoj Krishnamoorthi Updated:
சிம்பு வைத்து இருக்கும் BMW X6 என்ன இருக்குனு தெரியுமா..? | BMW X6 Review TamilRepresentative Image.

BMW நிறுவனத்தில் X series இல் வெளிவந்த கார் BMW X6 ஆகும். ஒருமுறை பார்த்தாலே நம்மை ஈர்க்கும் டிசைன்  BMW X6 காரின் முக்கியமான ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.  கோலிவுட்டில் அட்மென் என் அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் இந்த காரை தான் வைத்துள்ளார், இதுபோன்ற பல சுவாரஸ்ய அம்சங்கள், விலை முதலியவற்றை காண இந்த பதிவு உதவியாக இருக்கும். 

சிம்பு வைத்து இருக்கும் BMW X6 என்ன இருக்குனு தெரியுமா..? | BMW X6 Review TamilRepresentative Image

BMW X6 பர்ஃபாமன்ஸ்

பார்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் BMW கார்களில் X series அதிகமான நபர்களை ஈர்த்தது என்று சொல்லலாம். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது. 10.31 km மைலேஜ் கொண்ட X6 0-100 வேகம் எடுக்க 10 வினாடி கூட ஆகாது. 6 சிலிண்டர் கொண்ட 2998 cc இன்ஜின் 335 bhp @ 450 Nm டார்க்கை வெளிப்படுத்தும்.  

சிம்பு வைத்து இருக்கும் BMW X6 என்ன இருக்குனு தெரியுமா..? | BMW X6 Review TamilRepresentative Image

சிறப்பம்சங்கள் (BMW X6 Specifications)

க்ளாசிக் டிசைனில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்த X6 காருக்கு 21'M Spoke wheel தான் கொடுக்கப்பட்டுள்ளது.  12.3 டச் கண்டோர் டிஸ்பிளே, ரியர் சீட் அட்ஜெட்மெண்ட், மாடர்ன் டெக்னாலஜி போன்ற சொகுசு ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சொகுசு கார் என்பதில் வசதிக்கு கொடுத்த முக்கியத்துவம் பாதுகாப்பிலும் காட்டப்பட்டுள்ளது. அதன் ஆதாரமே சுற்றுப்புறத்தில் இருக்கும் ஏர்பேக் ஆகும். 

இதன் டிசைனிங் தான் பார்ப்பவரை வாங்க தூண்டும், துல்லியமான 4935 mm நீளம் 2004 mm அகலம் 1696 mm உயரம் ஆகும். SUV டைப் காராக இருந்தாலும் ராயல் லுக்கில் X6 கல்பரமைஸ் ஆகவில்லை.  2130 kg எடை கொண்ட BS 6 இன்ஜின் விதி முறைக்கு உட்பட்டதாகும். அடாப்டிவ் எம் சஸ்பன்ஷன் கொண்ட X6 கார் பவர் சன்னல் கொண்டு இருப்பது வண்டியின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. 

ஆட்டோமெட்டிக் கியர் டெரன்மிஷன் என்பதால் ஸ்மூத்தான பயணம் அளிக்கும். வண்டியின் பின்புற டிசைனில் ஸ்போர்ட் லுக் இருப்பது X6 காருக்கு ஒரு தனி சிறப்பு ஆகும். 

பவர் ஸ்டேரிங், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் நமக்கு வேகமான பயணத்திலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. மேலும் Fog Lights- front  சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. தாராளமான இடவசதி கொண்ட 5 சீட் காரான BMW X6 விலை  1.04 கோடி ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்