Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்.. | Tata Altroz CNG Mileage and Features

Nandhinipriya Ganeshan Updated:
எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்.. | Tata Altroz CNG Mileage and FeaturesRepresentative Image.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றான டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), மாருதி சுஸுகி பலேனோ, ஹுண்டாய் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்ஸா போன்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களுடன் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார்களில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், டாடா அல்ட்ராஸ் காரில், டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது.

எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்.. | Tata Altroz CNG Mileage and FeaturesRepresentative Image

எனவே தான் அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்து, இதற்கான பணிகளில் மும்பரம் காட்டிவந்தது. அதனடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ என்ற வாகன கண்காட்சியில் டாடா நிறுவனம் தரப்பில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG) மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலை இந்தியா முழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் ஏப்ரல் 19ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த காரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. சரி, வாங்க டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் விலை, அம்சங்கள், நிறங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம். 

எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்.. | Tata Altroz CNG Mileage and FeaturesRepresentative Image

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி அம்சங்கள்:

ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் விற்பனை அறிமுகமாகும் இந்த சிஎன்ஜி மாடலில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குரல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப், 16-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் அட்ஜெஸ்ட்மெண்ட் டிரைவர் சீட் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, இந்த மாடலில் 6 ஏர்பேக்குகள் ஆன்டி-லாக் பிரேக்குகள் (ABS) எலக்ட்ரானிக் பிரேக் விநியோகம் (EBD), ISOFIX ஆங்கர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல், சிஎன்ஜி மாடல் என்பதல, பாதுகாப்பு குறித்த கவலையே வேண்டாம்.

எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்.. | Tata Altroz CNG Mileage and FeaturesRepresentative Image

அல்ட்ராஸ் சிஎன்ஜி இன்ஜின்:

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பெட்ரோல் மூலம் இயங்கும்போது அதிகபட்சமாக 84.82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் பீக் டார்க்கை வழங்கும். ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது, இந்த இன்ஜின் பவர் 76 பிஎச்பி மற்றும் 97 என்எம் டார்க் ஆக குறைந்துவிடும். இருந்தாலும் சிறப்பான மைலேஜை (26.49km/kg) கொடுக்கும். இந்த மாடலில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. ட்வின் இந்த செக்மெண்ட்டிலேயே, சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ள முதல் காரும் இதுதான்.

எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்.. | Tata Altroz CNG Mileage and FeaturesRepresentative Image

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி விலை: 

கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் இந்த மாடல் 190 கிலோமீட்டர் தூரம் மற்றும் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. மேலும், டைமென்ஷனை பொறுத்தவரை, அல்ட்ராஸ் சிஎன்ஜி 3990மிமீ நீளமும், 1755 மிமீ அகலமும், 1523 மிமீ உயரமும் கொண்டது. 

இன்னும் இதன் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பெட்ரோல் வேரியண்ட்டை காட்டிலும், 60 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்