Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,158.16
-181.28sensex(-0.24%)
நிஃப்டி22,523.75
-46.60sensex(-0.21%)
USD
81.57
Exclusive

கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் டயர்… கலர் டயரால் இவ்ளோ ஆபத்தா.. எது பெஸ்ட்..?

Gowthami Subramani Updated:
கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் டயர்… கலர் டயரால் இவ்ளோ ஆபத்தா.. எது பெஸ்ட்..?Representative Image.

வாகனங்களில் எத்தனை நிறம் பார்த்திருப்பினும், அதன் டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே தோன்றும். இது எதனால் என்று யோசித்திருக்கிறீர்களா..? எவ்வளவு கோடி கொடுத்து பிடித்த கலரில் கார் வாங்க முடியும். ஆனால், கார் டயரின் நிறத்தை மாற்ற முடியாது. இதுவே டயரின் நிறத்தை மாற்றினால் என்ன நடக்கும்? இது போன்ற பல்வேறு கேள்விகள் எழும். இந்தப் பதிவில் டயர் கலர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றைப் பற்றிக் காண்போம்.

கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் டயர்… கலர் டயரால் இவ்ளோ ஆபத்தா.. எது பெஸ்ட்..?Representative Image

வெள்ளை நிற கார் டயர்

1895 ஆம் ஆண்டில், கார் டயர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் வெள்ளை நிறத்தில் தான் வந்து கொண்டிருந்தது. டயர் என்பது ரப்பரால் ஆனதாகும். அதாவது ரப்பரை, வல்கனைசேஷன் என்ற முறையைப் பயன்படுத்தி கடினமாக்குவர். ரப்பரை வல்கனைசேஷன் செய்த பிறகும் அது வெள்ளையாகவே இருந்தது. இந்த வெள்ளை ரப்பர் சீக்கிரமே தேய்ந்துவிடும் தன்மை கொண்டதாக இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல், நீண்ட நேர பயணங்களில் டயர்கள் சூடாகி அதன் வடிவமே மாறி விடுவதாகவும் கூறப்பட்டது. இதனைச் சரி செய்வதற்கே, ரப்பருடன் ஜிங்க் ஆக்ஸைடு என்ற பொருளைச் சேர்த்தனர்.

கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் டயர்… கலர் டயரால் இவ்ளோ ஆபத்தா.. எது பெஸ்ட்..?Representative Image

உலகப்போர் சமயத்தில்

தற்போது, நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கருப்பு நிற டயர் ஆனது, உலகப்போர் நடந்த சமயத்தில் உருவானது. ரப்பரில் பயன்படுத்தப்படும் ஜிங்க் ஆக்ஸையை தனியாக உற்பத்தி வேண்டியதாக இருந்தது. எனவே, இதற்கு வேறு ஒரு முறையைக் கண்டறிய வேண்டும் என கார்பன் பிளாக் என்ற பொருளை ரப்பருடன் சேர்த்தனர். இதனால், டயர் தேய்மானம் அடைவது குறைந்தது. இதனை முதலில் டயரின் டிரெட்டில் மட்டுமே பயன்படுத்தினர். இதனால், டயரின் டிரெட் கறுப்பு நிறத்திலும், மற்ற பகுதிகள் வெண்மையாகவும் இருந்தது.

கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் டயர்… கலர் டயரால் இவ்ளோ ஆபத்தா.. எது பெஸ்ட்..?Representative Image

எந்த சூழ்நிலையிலும்

இவ்வாறு கார்பன் மூலக்கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டயர்கள், கருப்பு நிறத்தைக் கொண்டு காணப்பட்டது. இந்த கார்பன் மூலக்கூறுகள், டயர்களை வலிமையாக்கி, பெரிய பெரிய கற்களையும் எளிதாகச் சமாளிக்கும் படி செய்தது. இதன் பின்பே, டயர் தொழில் வளர்ச்சியடையத் துவங்கியது. மேலும், இந்த கார்பன் மூலக்கூறுகள் காரணமாக டயர்கள் ரோட்டில் உருளும் போது தரைக்கும், டயருக்கும் ஏற்படும் உராய்வைக் குறைக்கிறது. இது டயரின் உழைப்பு மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது. இதுவே, வெள்ளை நிறத்தில் டயர்கள் இருப்பின் அது வெப்பத்தைத் தாங்காமல் போவதுடன், டயரின் உழைப்பையும் குறையத் துவக்கியது.

கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் டயர்… கலர் டயரால் இவ்ளோ ஆபத்தா.. எது பெஸ்ட்..?Representative Image

ஏன் மற்ற நிறங்களில் டயர்கள் இல்லை?

இந்த கார்பன் மூலக்கூறு சேர்த்து டயர்கள் தயாரிக்கப்பட்டாலும், கருப்பு நிறத்தில் மட்டுமே இருந்தது. ஏனெனில், கருப்பு நிறமே வெப்பத்தை அதிகமாகத் தாங்கும் திறனைக் கொண்டதாக இருக்கும். எந்தவொரு வெப்பநிலையாக இருப்பினும், டயர்கள் நீடித்து உழைக்கும் தன்மையை எட்டுவதற்கு இந்த கார்பன் மூலக்கூறுகள் உதவுகிறது.

அதே சமயம், வாகனங்களில் முக்கிய பாகமாக இருக்கும் இதன் தரத்தினை குறைக்க முடியாது. இதுவே கார்கள் டயரின் கலரை மாற்ற வேண்டும் என்றால், குறைந்த தரத்திலேயே டயர்களைத் தயாரிக்க முடியும். எனவே, நிறத்தை மாற்ற விரும்பினால், தரம் குறைந்து விடும் என்பதாலேயே, எப்போதும் டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கிறது.

கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் டயர்… கலர் டயரால் இவ்ளோ ஆபத்தா.. எது பெஸ்ட்..?Representative Image

கலர் கலர் டயர்கள்

எவ்வாறு, கார்பன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி வெள்ளை நிற டயர் கருப்பு நிறமாக மாறி நல்ல வலிமை தருமாறு கண்டறியப்பட்டதோ, அதே நேரத்தில் டயர்கள் பல்வேறு நிறங்களில் தரமாகவும் கிடைக்க அறிவியல் வளர்ச்சி ஏற்படலாம். இவ்வாறு, கலர் கலராக டயர்கள் வந்துவிட்டால், டயர் நிறத்தின் தேர்வுக்கு ஏற்றாற் போல, அதன் விலையும் மாறுபடும். மக்களால் அதிகம் விரும்பப்படுகிற, குறிப்பிடப்பட்ட கலருக்கு அதிக டிமான்ட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம், இவ்வாறு கலர் டயர்கள் வருமாயின், விற்பனையாளர்களுக்கு லாபத்தை அளிக்குமே தவிர, பயனாளர்களுக்கு லாபம் இருக்காது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்