டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் ஈவி மேக்ஸ் டார்க் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் கலக்கலான தோற்றத்திலும் களமிறங்கிய இந்த நியூ மாடலின் சிறப்பம்சங்கள், மைலேஜ், விலை குறித்த முழுவிவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த எலக்ட்ரிக் காரின் உட்புறத்தில் கருப்பு நிறம் சேர்க்கப்பட்டு #Dark பேட்ஜ் உடன் கூடிய இருக்கை, 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஎஃடி உயர்தர எச்டி டிஸ்ப்ளே, 180+ வாய்ஸ் கமென்ட்ஸ், எச்டி ரியர்வியூ கேமரா, வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பாக, சஃபாரி மற்றும் ஹாரியர் டார்க் எடிசன் கார்களில் இந்த சிஸ்டம் கொண்டு வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், இந்த ஈவி மேக்ஸ் மாடலில் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளில் பயனர் இடைமுகம் (user interface - UI) மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் இடம்பெற்றுள்ளன.
வெளிப்புறத்தை பொறுத்தவரை, இந்த மாடலில் மிட்நைட் பிளாக் நிறத்தை வழங்கி 16-இன்ச் சார்கோல் கிரே அலாய் வீல், ஸ்டெயின் பிளாக் ஹ்யூமானிட்டி லைன், புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகள், ட்ரை-அரோ எல்இடி டெயில் லைட், டார்க் மாஸ்காட் ஆகியவை உள்ளன.
நெக்ஸான் EV மேக்ஸ் காரின் பவர் 141bhp மற்றும் 250Nm வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 453 கிமீ வரை பயணிக்கலாம்.
இந்த ஸ்டைலிஷ் ஈவி மேக்ஸில் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், AQI டிஸ்ப்ளே கொண்ட ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், ரெயின் சென்சிங் வைப்பர், ஆட்டோமேட்டிக் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல், கூல்டு க்ளோவ்பாக்ஸ், பின்புற ஏசி வென்ட்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் (PEPS) கொண்ட ஸ்மார்ட் கீ, ஆட்டோ ஃபோல்டுடன் கூடிய மின்சாரத்தில் இயங்கும் ORVMS, பின்புற வைப்பர் வாஷர் & டிஃபோகர், 4 ஸ்பீக்கர்+ 4 ட்வீட்டர்கள், ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ் மற்றும் முழு கிராஃபிக் டிஸ்ப்ளே உடன் கூடிய 7-இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன.
டாடா நெக்ஸான் ஈவி மேக்ஸ் மாடலானது நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவியின் நீட்டிக்கப்பட்ட பதிப்பாகும். XZ+ LUX மற்றும் 7.2 kW AC ஃபாஸ்ட் சார்ஜருடன் கூடிய XZ+ LUX என்ற இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை என்று பார்த்தால், XZ+ LUX மாடல் ரூ.19.04 லட்சத்திற்கும், XZ+ LUX (7.2 kW AC fast charger) மாடல் ரூ.19.54 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…