Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்த சேவைகளை நிறுத்தும் அமேசான்…! இது தான் காரணமாம்..?

Gowthami Subramani Updated:
அடுத்தடுத்த சேவைகளை நிறுத்தும் அமேசான்…! இது தான் காரணமாம்..?Representative Image.

அமேசான் நிறுவனமானது தனது உணவு விநியோக வணிகத்தை இந்தியாவில் நிறுத்த உதவுகிறது.

அடுத்தடுத்த சேவைகளை நிறுத்தும் அமேசான்…! இது தான் காரணமாம்..?Representative Image

அமேசான் அகாடமி

உலகின் முன்னணி ஆன்லைன் வணிகத்தின் இணையதளமாக விளங்குவது அமேசான் அகாடமி ஆகும். கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்குக் கற்றல் தளத்தை உருவாக்கித் தரும் நிலையில் அமேசான் அகாடமி இருந்துள்ளது. மேலும், NEET உள்ளிட்ட தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு ஆன்லைனில் கற்றல் தளமாக அமேசான் அகாடமி இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆன்லைன் கற்றல் தளமான அமேசான் அகாடமியை இந்தியாவில் நிறுத்த முடிவு செய்துள்ளது.

அடுத்தடுத்த சேவைகளை நிறுத்தும் அமேசான்…! இது தான் காரணமாம்..?Representative Image

புதிதாக பதிவு செய்தவர்களின் நிலை

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைந்த கற்றல் தளமான அமேசான் அகாடமியானது வாடிக்கையாளர்களைப் பெரும் அளவில் கொண்டுள்ளது. இந்நிலையில், விரைவில் நிறுத்த இருக்கும் அமேசான் அகாடமியின் ஆன்லைன் கற்றலில் புதிய பேட்ச்சில் பதிவு செய்த நபர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த சேவைகளை நிறுத்தும் அமேசான்…! இது தான் காரணமாம்..?Representative Image

அடுத்து அமேசான் உணவு சேவை

இதனைத் தொடர்ந்து, தற்போது அமேசான் நிறுவனமானது அதன் உணவு விநியோக சேவையை மூடப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த மே 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள உணவக கூட்டாளர்களின் மூலம் தொடங்கப்பட்ட உணவு விநியோக சேவையினை அமேசான் நிறுவனம் மூட திட்டமிட்டுள்ளது.  அதன் படி, வரும் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் Amazon Food மூலம், ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற முடியாது எனக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த சேவைகளை நிறுத்தும் அமேசான்…! இது தான் காரணமாம்..?Representative Image

பொருளாதார மந்தநிலை

உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் காரணமாக, கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் வணிகத்தில் ஏற்பட்ட செலவைக் குறைத்துக் கொண்டு வருகின்றன. இதில், அதிக பணத்தை சேமிக்க முடியும் என்பதைக் கண்டறிவதற்கு வருடாந்திர முறையில் மதிப்பாய்வு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

அடுத்தடுத்த சேவைகளை நிறுத்தும் அமேசான்…! இது தான் காரணமாம்..?Representative Image

பணி நீக்கம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாகக் கூறியுள்ளது. இதில், அமேசான், ட்விட்டர், ஃபேஸ்புக், ஹெச்பி, மற்றும் இன்னும் சில பல்வேறு நிறுவனங்களும் அடங்கும். இவ்வாறு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதும், நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்