Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

No Cost EMI-ல் பொருள்கள் வாங்குபவர்களா… அப்ப நீங்க கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்…!

Gowthami Subramani October 13, 2022 & 20:00 [IST]
No Cost EMI-ல் பொருள்கள் வாங்குபவர்களா… அப்ப நீங்க கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்…!Representative Image.

இன்றைய சூழலில், தவணை முறை என்பது புதிது கிடையாது. மக்கள் பெரும்பாலும், இந்த முறையிலேயே பொருள்களைப் பெறுகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இணையதளத்தில் விற்பனை செய்தல் போன்றவை தோன்றுவதற்கு முன்னராகவே, தவணை முறையில் பொருள்களைப் பெற்றுச் செல்லும் முறை வந்தது. அதன் படி, தவணை முறையில் பொருள்கள் வாங்கும் நபர்கள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவோம். இதில், நோ காஸ்ட் இஎம்ஐ என்பதை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். நோ காஸ்ட் ஈஎம்ஐ என்றால் என்ன? எப்படி அதில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்டவற்றைப் பற்றி காண்போம்.

No Cost EMI-ல் பொருள்கள் வாங்குபவர்களா… அப்ப நீங்க கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்…!Representative Image

நோ காஸ்ட் ஈஎம்ஐ

இவ்வாறு தவணை முறையில் தொகை செலுத்துவதே, Equated Monthly Installment (EMI) என கூறப்படுகிறது. தற்போது ஈஎம்ஐயில் பொருள்கள் வாங்கினால், அதில் சிறப்பு சலுகையாக நோ காஸ்ட் ஈஎம்ஐ வழங்கப்படுகிறது. அதாவது வட்டி எதுவும் இல்லாமல், பொருளின் அசல் விலையைத் தவணைத் தொகை வழங்கி பெறுவதாகும். ஆனால், இதுவரை நாம் யாராவது சிந்தித்திருப்போமா..? உண்மையிலேயே நோ காஸ்ட் ஈஎம்ஐ வட்டி எதுவும் கிடையாதா.? அல்லது வேறு ஏதேனும் மறைமுக கட்டணங்கள் உங்களுக்குத் தெரியாமல் வசூலிக்கப்படுகிறதா..? இந்த கேள்வி குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

No Cost EMI-ல் பொருள்கள் வாங்குபவர்களா… அப்ப நீங்க கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்…!Representative Image

நோ காஸ்ட் ஈஎம்ஐ-ல் விற்பனை

நுகர்வோர்கள் தங்களது விருப்பமான பொருள்களை நோ காஸ்ட் EMI மூலம் பெறுகின்றனர். ஆனால், இதற்கான கட்டணங்கள் எவ்வாறு உங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி காண்போம்.

உதாரணமாக, மொபைல் ஒன்றை வாங்க விரும்புகிறீர்கள். நீங்கள் தேர்வு செய்த அந்த மொபைலுக்கு நோ காஸ்ட் EMI உடன் பல்வேறு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் படி, அந்த மொபைலின் அசல் விலை ரூ.20,000. ஆன்லைன் பேமென்ட் மூலம் நீங்கள் செலுத்தி வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.18,000 செலுத்தி மொபைலைப் பெறலாம்.

No Cost EMI-ல் பொருள்கள் வாங்குபவர்களா… அப்ப நீங்க கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்…!Representative Image

தள்ளுபடி கிடைக்காது

இதுவே, நீங்கள் அந்த மொபைலை No Cost EMI மூலம் பெறுகிறீர்கள் எனில், அந்த மொபைலுக்கான 10% ரத்தாகி விடும். நீங்கள் வாங்கவிரும்பும் மொபைலை அசல் விலையான ரூ.20,000-க்கு நீங்கள் பெற முடியும். அதன் படி, No Cost EMI மூலம் பொருள்கள் வாங்கும் நபர்களுக்கு தள்ளுபடி வசதி கிடையாது.

No Cost EMI-ல் பொருள்கள் வாங்குபவர்களா… அப்ப நீங்க கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்…!Representative Image

மற்றொரு உதாரணம்

இதற்கு மற்றொரு உதாரணம் ஒன்றைக் காண்போம். நோ காஸ்ட் ஈஎம்ஐக்கு வட்டி விகிதம் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது, நீங்கள் வாங்கும் பொருளின் விலை ரூ.5,000 என எடுத்துக் கொள்க. ஆனால், இந்த பொருளுக்கு நீங்கள் No Cost EMI ஆப்ஷனைத் தேர்வு செய்தால், 12 மாதங்களுக்கு 20% வட்டியில் மாதம் ரூ.1000 செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை நீங்கள் தேர்வு செய்தால், 12 மாதங்களுக்கு ரூ.500 வீதம் மொத்தமாக ரூ.6,000 செலுத்துவீர்கள்.

அதே போல, மற்றொரு ஆப்ஷனும் இருக்கும். இதில், பொருளின் தொகை அப்படியே 12 மாதங்களுக்கு பிரிக்கப்பட்டு நீங்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், நோ காஸ்ட் விருப்பத்தில் பொருள்களை வாங்க நினைக்கும் நபர்கள், வட்டி தனியாக செலுத்தாமல், அதன் கூடுதல் தொகையை Processing Fee என்று வசூலிக்கப்படும்.

No Cost EMI-ல் பொருள்கள் வாங்குபவர்களா… அப்ப நீங்க கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்…!Representative Image

எந்த சமயத்தில் No Cost EMI-ஐத் தேர்வு செய்யலாம்?

நோ காஸ்ட் இஎம்ஐ-ஐ எப்போது தேர்வு செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்த பொருள்களை வாங்க வேண்டும். அதே சமயம் உங்களிடம் போதுமான பணம் இல்லை எனும் போது, அல்லது முன்பணமாக செலுத்தக் கூடிய தொகை இல்லை எனும் போது, இந்த நோ காஸ்ட் ஈஎம்ஐ முறையைப் பயன்படுத்தி வாங்கலாம்.

மேலும், புதிதாக கடன் வாங்காமல் உங்களுடைய கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி நோ காஸ்ட் ஈஎம்ஐ வசதிகளைப் பெறலாம். அதன் படி, நோ காஸ்ட் ஈஎம்ஐ மூலம் பொருள்கள் வாங்குபவர்கள், வங்கிக் கடனுக்கு செலுத்துவது போல மாதந்தோறும் தவணையைத் தவறாமல் செலுத்த வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்